மகாபாரதத்தில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. ஆனால் அதில் சூதாட்டம், கொடூரமான போர் போன்ற சம்பவங்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு சொல்ல கூடிய கதையல்ல என்ற ஒரு அபிப்ராயம் பல பேரிடம் உண்டு.
ஆழமான கருத்துக்கள் கொண்ட மஹாபாரததின் குட்டி கதைகளை நம் குழந்தைகளுக்காக மாற்றி சொல்வதில் தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதோ இந்த கதை போல்…
அர்ஜுனனனுக்கும் சுபத்ராவுக்கும் பிறந்த அபிமன்யு தன் சிறு வயதில் மாமன் க்ரிஷ்ணணிடம் வளர்ந்து வந்தான்.அவரிடம் பல வித்தைகளை கற்று கொண்டான். யுத்தத்தில் எப்படி போரிடுவது, எதிரிகளின் வியூகத்தை எப்படி உடைத்து உள்ளே செல்வது மற்றும் வெளியே வருவது போன்ற பல விஷயங்களை அவனுக்கு க்ரிஷ்ணர் கற்று கொடுத்தார்.
முதலில் மிகவும் ஆர்வத்துடன் கற்று வந்தாலும் மெதுவாக கவனத்தை சிதற விட்டதால் சில வித்தைகளை சரியாக கற்கவில்லை. முக்கியமாக வியூகத்தை உடைத்து எப்படி வெளியே வருவது என்பதை கற்காமல் விட்டு விட்டான். “மாமா இதெல்லாம் யுத்தம் வந்தால் தெரிந்து கொள்கிறேன்” என்று சொல்லி விளையாட்டுதனமாக இருந்தான்
பல வருடங்களுக்கு பிறகு யுத்தம் நடந்தது. க்ரிஷ்ணரும் தந்தை அர்ஜுனரும் அபிமன்யுவிற்கு அறிவுரை கூறி யுத்தத்தில் பங்குபெற வேண்டாம் என்றனர். ஆனால் அபிமன்யு பங்குபெறுவேன் என்று அடம்பிடித்து யுத்தத்திற்கு சென்றான்.
யுத்தத்தில் எதிரிகள் சக்கர வியூகம் அமைத்தனர். யுத்த நெறி படி ஒரு வியூகம் அமைத்தால், அதை உடைத்துச் சென்று வியூகத்தின் நடுவிலுள்ள வீரர்களுடன் சண்டையிட வேண்டும்.
அந்த நேரத்தில் அர்ஜுனனும் க்ரிஷ்ணனும் வேறு ஒரு இடத்தில் போர் புரிய சென்றதால் அபிமன்யு அந்த வியூகத்தை உடைக்க சென்றான். ஒரு வினாடியில் பல அம்புகளை எய்து வீரர்களை தாக்கி உள்ளே சென்றான். அனால் அவன் வியூகத்தின் நடுவில் சிக்கி கொண்டான். எவ்வளவோ போராடியும் அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் யுத்தத்தில் தோல்வி அடைந்தான்.
அப்பொழுதான் அவன் சிறு வயதில் யுத்த பாடம் படிக்கும் நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்ததும், வியூகம் உடைக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ளாததும் மிகப்பெரிய தவறு என்று அவனுக்கு புரிந்தது.
நாம் படிக்கும் பாடமும், பெரியவர்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களும் பல நேரங்களில் கை கொடுக்கும். அதை முழுமனதுடன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை அபிமன்யுவின் சம்பவம் நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
இப்படி நம் குழந்தைகளுக்கு கதை சொல்லலாமே. பிறகு அபிமன்யுவுக்கு என்ன நடந்தது என்பதை குழந்தைகள் பிற்காலத்தில் தெரிந்து கொள்ளட்டும். மகாபாரத்தில் நடந்த சம்பவங்களை விட, அதன் கருத்துக்களை குழந்தைகள் மனதில் பதிய வைப்பதே மிக முக்கியம்.
சக்கர வியூகம் வடிவம், வீரர்கள் சக்கர வடிவில் நிற்கும் விஷயங்கள் குழந்தைகளுக்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.
நீங்களும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இப்படி கதை சொல்லி, உங்கள் அனுபவத்தை இங்கு பகிருங்கள்.
மேலும் உங்களுக்கு இது போன்ற வேறு ஏதாவது கதைகள் நினைவுக்கு வருகிறதா? அப்படி இருந்தால் கமெண்ட்ஸ் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
மிகவும் நல்ல பதிவு ராமலிங்கம் . குழந்தைகளுக்காக சிறிது மாறுதல்களுடன் புராண கதைகளை சொல்வதில் தவறில்லை என்றே நானும் நினைக்கிறேன்.
மிக்க நன்றி ரங்கராஜன்
Good 👍
Thanks Gopinath
Very Good
Thanks Sivaramkrishnan