தமிழர் வாழ்க்கையில் புத்தாண்டு ஒரு முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு தமிழ் ஆண்டு என்பது சூரியன் மேஷ இராசியில் பிரவேசிப்பதில் தொடங்கி (சித்திரை) மீன இராசியிலிருந்து வெளியேறும் வரை (பங்குனி) உள்ள கால அளவு ஆகும். இந்த அளவு, பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர ஆகக் கூடிய 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் என்ற அளவை எப்போதும் ஒத்தே இருக்கும். எனவே தமிழ் வருடத்தின் கால அளவு ஆங்கில வருடத்தின் கால அளவு போல இல்லாமல் எப்போதும் சீரானதாகவே இருக்கும். இதே நாள் கேரளத்தில் விஷு என்ற பெயரிலும், வட மற்றும் மத்திய இந்தியாவில் பைசாகி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி வாயிலில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். தவிர மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்களை கடவுள் முன் வைத்து, அதைப் புத்தாண்டன்று அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மேலும் வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் கலந்தது என்பதைக் குறிக்கும் வகையில் வேப்பம்பூ மற்றும் மாம்பழம் கலந்து பச்சடி செய்து செய்து இந்நாளில் உண்கிறோம். வேம்பு ஒரு தலைசிறந்த மூலிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மொத்தம் உள்ள அறுபது தமிழ் வருடங்களில் தற்போது உள்ள விகாரி வருடம் முடிந்து சார்வரி தொடங்க இருக்கிறது. இந்த அறுபது வருடங்களும் வடமொழியில் பெயரைக் கொண்டுள்ளன. விகாரி என்றால் ‘மாறுதல்’ என்று பொருள் கொள்ளலாம். இந்த வருடத்தில் மனித வாழ்க்கையே எவ்வளவு மாறிவிட்டது! சார்வரி என்பதற்கு ‘வீறு கொள்ளுதல்’ அல்லது ‘இரவில் உருவானது’ என்ற இரு பொருட்கள் உள்ளன. நமது துன்பங்களை தள்ளி வீறு கொண்டு எழ இந்த வருடம் ஒரு நல்ல தருணமாகும். அடுத்த பொருளான இரவில் உருவானது என்பதை நாம் பகவான் கண்ணன் எனக் கொள்ளலாம். அவர் மதுராவில் சிறைக்குள் இரவில் பிறந்தவர் அல்லவா ! நாம் அனைவரும் அவரைச் சரண் புகுந்து வந்திருக்கும் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவோம்.
சார்வரி வருடத்தில் சொல்லக் கூடிய ஒரு ஸ்லோகம் இதோ:
கரோது ஷார்வரீ காசித் தே3வதா கருணா மயீ
வத்ஸரா: ஷார்வரீ நாம யதா2 ந: ஸுப4க3ஸ் ததா2
தமிழ் வருடங்களையும் அவற்றின் ஆங்கில வருடங்களையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் மூலம் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பிறந்த தமிழ் வருடத்தை பற்றி அறியலாம். அறுபது வயதைக் கடப்பவர்கள் மீண்டும் ஒரு சார்வரியைக் காணப் போகிறார்கள் !
வாசகர்கள் அனைவருக்கும் சார்வரி ஆண்டு நல்வாழ்த்துக்கள் !
குறிப்பு: ஸ்லோகம் மற்றும் பொருள் விளக்கம், ஸ்ரீ கருணாகரச்சாரியார் அவர்களின் உரையிலிருந்து.
Very nicely presented n it’s informative for those who never paid in any of our culture n ancient ways of living.
Thanks very much Sampath Kumar for your kind words.
தமிழ் வருடத்திற்கு வடமொழி பெயர் வைக்க காரணம் என்ன. தமிழ் மாதங்களுக்கு தமிழ் பெயர் இருக்கும் போது, வருடத்திற்கு மட்டும் வட மொழி பெயர். எதனால் கேட்கிறேன் என்றால், ஒரு கலந்துரையாடல்இல் பங்குஏற்பதற்கு உதவி ஆக இருக்கும்.
மிக்க அருமையான கேள்வியைக் கேட்டதற்கு நன்றி! நான் படித்த அளவில் தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன். பழங்காலத்தில் தமிழ் மற்றும் வடமொழி இரண்டுமே புழக்கத்தில் இருந்தன. சொல்லப்போனால் இரண்டையும் பிரிக்க முடியாத மணிப்பிரவாளம் என்கிற நடையும் கூட இருந்தது (மணி மற்றும் பவளம் போன்ற இரு மொழிகள்). எனவே தான் சில இடங்களில் முழுதும் தமிழ் சொற்கள் இருக்கின்றன (சித்திரை, வைகாசி .. திங்கள், செவ்வாய் ) சில கலப்புச் சொற்கள் சேர்ந்து இருக்கின்றன (அஸ்வினி, பரணி, ரோஹிணி – வடமொழி; பூரம், சதயம், ஆயில்யம் – தமிழ்). அந்த வரிசையில் வருடங்களை முழுவதுமாக வடமொழியிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உயர்வு தாழ்வு சொல்லப் படவில்லை, மொழியையும் சேர்த்தே தான்..
Excellent Ranga, many of them don’t know about this… thanks for this wonderful info..
Thanks Raathigha. I am glad you found this useful.
Very nice thank u to share here
Thanks very sir.
Very nice Ranga.. Thank you for the info.
Thanks very much Shoba.
Informative. An opportunity to know list of 60 Tamil years.
Thanks very for your comments, Dr. Senthil.
Excellent write up and so informative. A loukika fact regarding our new year pachidi 🙂 is that it also includes the arusuvais or 6 different tastes …symbolizing human acceptance of varying flavors of life!!
Talking of arusuvais “Thuvarppu” is so unique to the Tamil language…the closest that English translators get to is “astringent”
Thanks Soumya. I expected the note about pachadi from you! Very nice explanation of the 6 different tastes!
விளக்கத்திற்கு நன்றிகள் பல.
தை மாதமே இள வேனில் காலம் தொடங்குகிறது.தை முதல் தேதியே தமிழர்களுக்குப் புத்தாண்டு .புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களும் இதையே கூறியுள்ளார்
தங்கள் கருத்துக்கு நன்றி.