ஆதிகாவியமான இராமாயணத்தின் சிறப்புகளை நாம் அனைவரும் அறிவோம். தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கடவுளே இந்த பூமியில் மனிதனாக அவதரித்து பல இன்னல்களை அனுபவித்தான். அவைகளை வெற்றியுடன் கடந்து புருஷோத்தமன் என்ற பெயர்ப் பெருமையைப் பெற்றதைக் கூறும் மகத்தான காவியமாகும் இது. சற்று கூர்மையாய் சிந்தித்தால் சில சுவாரஸ்யமான முரண்களை இதில் காணலாம்.
அவை இதோ:
அ ) தந்தையின் சொல்லைக் கடைபிடித்ததால் ஒருவனுக்குப் பெருமை; மீறியதால் மற்றவனுக்கு பெருமை
இராமன் தன் தந்தை தசரதரனின் வாக்கைக் காப்பாற்ற மகிழ்ச்சியுடன் வனவாசம் சென்றான். உலகம் அவனைப் போற்றியது. பரதனோ அவனுக்கு கிடைத்த ஆட்சியைத் துளி கூட மதியாமல் இராமனின் பாதுகைகளைக் கொண்டு அயோத்திக்கு வெளியில் இருந்து பயபக்தியுடன் ஆட்சியை இராமனுக்காக பாதுகாத்து பின் அவனிடம் ஒப்படைத்தான். தந்தை சொல்லை மீறிய காரணத்துக்காகவே உலகம் அவனைக் கொண்டாடியது .
ஆ ) கணவனுடன் பிரியாமல் சென்றதால் ஒருவருக்கு ஏற்றம்; பிரிந்ததால் இன்னொருவருக்கு ஏற்றம்
இராமன் வனவாசம் ஏற்ற பொழுது அவனுடன் பிரியாமல் சென்றதால் புகழ் அடைந்தாள் சீதை. தமயனுக்கு சேவை செய்ய வேண்டிய காரணத்தால் அவனோடு சென்ற இலட்சுமணனைப் பிரிந்து இருந்த அவன் மனைவி ஊர்மிளைக்கும் அதே ஏற்றம் காணப்படுகிறது.
இ ) சகோதரனைப் பிரிந்து வந்தவனுக்கும் நற்கதி; அவனைப் பிரியாமல் காக்க முயன்றவனுக்கும் நற்கதி
தமயன் இராவணனின் தீய செயல்களைப் பொறுக்க மாட்டாது அவனை உதறித் தள்ளி இராமனிடம் சரணாகதி அடைந்த விபீடணனுக்கு இராமன் அபயம் அளித்து நற்கதி அடைய உதவினான். ஆனால் இராவணனுக்குத் தான் செய்த தன் நல்லுபதேசம் வீணான போதும், அவனை விட்டு விலகாமல் அவனுக்காகப் போரிட்டு வீர மரணம் எய்தினான் கும்பகர்ணன். இருவருக்குமே நல்பதவி கிட்டியதைக் காண்கிறோம்.
முடிவுரை
மேல்காணும் சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானது போல தோன்றினாலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஒன்று தான். ஒரு தர்ம சங்கடமான நிலைமையை எதிர் நோக்கும் போது எந்த செயல் தர்மத்தின் பக்கம் இருக்குமோ அதனையே நாம் மேற்கொள்ள வேண்டும். சிறிது கடினம் தான், ஆனாலும் நமது ஆச்சார்யர்களின் துணை கொண்டு நமது செயலில் வெற்றி காணலாம்.
அன்று அர்ச்சுனனே அந்த கீதாச்சார்யனின் உபதேசத்தின் மூலம் தானே பாரதப் போரில் சாதித்தான்!
முரண்கள் அருமை.
ஆனால் தர்ம சங்கடம் என்பதே இரண்டு தர்மத்தில் எது சிறந்த தர்மம் என்பது தான்.
1. அடித்து சாப்பிடுவது ஓநாயின் தர்மம்; பிழைத்து வாழ்வது ஆட்டின் தர்மம்.
2.என் ஆசாரியன் ஒரினச் சேர்க்கை தவறு என்று கூறுகிறார். அவர் தவறு என்று நான் கூறுவது தர்மம் ஆகுமா? மனசாட்சிக்கு விரோதமாக தலையாட்டுவது தர்மம் ஆகுமா?
3. என் நண்பனின் ஆச்சர்யர் வேறு தர்மம் போதிக்கிறார். என்ன செய்வது?
4. என் ஆச்சார்யர்களிலேயே 44வது பட்டம் ஒன்று சொன்னார். 45ஆவது பட்டம் வேறு சொல்கிறார். என்ன செய்வது?
5. ஆசாரியன் நான் தேர்ந்தெடுப்பதா அல்லது எனக்கு பிறப்பின் மூலம் விதிக்கப்பட்டதா?
6. ஆச்சர்யன் சொல்வது அனைத்தும் வேத வாக்கா? ஆச்சார்யனும் மனிதன் என்றால் அவர் தவறு செய்வதும் இயற்கை அல்லவா?
7. ஆசாரியன் ஒன்று தானா அல்லது பலர் வைத்துக் கொள்ளலாமா?
8. தர்மம் அனைத்துக் காலத்திற்கும் ஒன்றா? அனைத்து இடங்களுக்கும் ஒன்றா?
9. பெருன்பான்மை மக்கள் சொல்வது தான் தர்மமா? மக்களாட்சியில் அது தான் சட்டம். சட்டமும் தர்மமும் வெல்வேறானால் என்ன செய்வது?
நன்றி சுதர்சன்!
நடைமுறையில் பல முரண்களைக் காண முடிந்ததே தேடலின் முதல் படி! இதன் பிறகு சொல் புத்தி மற்றும் சுய புத்தியின் மூலம் படிப்படியாக சரியான உணர்தலை அடையமுடியும் என்று நம்புகிறேன்!
அப்படித்தான் விவேகானந்தர், சித்தார்த்தர், சங்கரர் போன்ற பலர் ஜொலித்து இருக்கிறார்கள்.
இராமானுஜர் பார்க்காத தர்மசங்கடங்களா?
Sir: Namaskarams… It is very interesting & easy to debate puranas & ask questions kind of rational. Why it is like this… What.. & so on… We are responsible for what we are. World runs on cause & effect (Karma). We cannot blame others for our action. TretaYuga… their is fight between two kings because for Maya of acquisition of other ones possession(wife)”… Dwapara Yuga… their is fight between brothers (blood relation) because of Maya of acquisition of other ones possession(Land). Kali Yuga…. their is fight within self (divine – Deva & devil – asura within self ) to acquire of all the three… Ramakrishnan act devil for some circumstances…. Same Ramakrishnan act divine for some circumstances.. We cannot label anyone. Every action has equal & opposite reaction – Newton. In Kali Yuga the Newton law will be experienced in same janma….. Self thedal (self introspection) will help us to strike the equilibrium…..Sthitapragnya (means action without expecting deserved result as briefed by Rangarajan Sir in yesterday session… Thank you
Thanks Ramakrishnan! You are absolutely right.. Spiritual curiosity (there is a word for that in Sanskrit – Jignyaasaa) will help us in becoming Sthithapragnya.