ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என் பள்ளித்தோழி தான் பார்த்த திரைப்படத்தில் கர்ணன் மிகச் சிறந்த வீரனாகவும் கொடையாளியாகவும் இருந்தும் பாண்டவர்களிடம் தோற்றுப் போனதாகக் கூறினாள். மேலும் கர்ணன் பாண்டவர்களின் அண்ணனா? கர்ணன் செய்த தர்மம் ஏன் அவன் வெற்றி அடைய உதவவில்லை? தவிர நீங்கள் துரியோதனனை பற்றி சொன்னதே இல்லையே”, என்று பல கேள்விகளை கேட்டாள்.
அவள் அப்பா ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் கர்ணன் தனக்கு கொடுத்த பயிற்சி முறையை பின்பற்றாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்ததாலும், அவன் பயின்ற வித்தை மூலம் மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாலும் கடைசியில் தோல்வியைச் சந்தித்தான் என்று நந்தனாவிடம் கூறி இருந்தார். முழுக் கதைக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள் குழந்தைகளுக்கான கர்ணன் கதை
ஒரு புன்னகையுடன் அவள் தந்தை, “உன் தோழி கர்ணனை பற்றிச் சொன்ன விஷயங்கள் உண்மைதான். கர்ணன் மிகத் திறமையான வீரன். ஆனால் ஒருவன் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களோடு சகவாசம் வைத்துக்கொண்டால் அவன் தோல்வியையே சந்திப்பான் என்பதற்கு கர்ணன் ஒரு எடுத்துக்காட்டு.”
“கர்ணன் செய்த தானம் அவனை ஏன் வெற்றி அடைய செய்யவில்லை என்ற கேள்விக்கு கிருஷ்ணரின் பதில் அழகானது. கர்ணன் யுத்தத்தில் தோல்வியடைந்த பிறகு கிருஷ்ணரிடம் முறையிட்டான். தான் செய்த தானம் பற்றியும் தனக்கு நடந்த அநீதி பற்றியும் கேட்டான். கிருஷ்ணர் மிக அழகாக மறுமொழி சொன்னார்.”
“கர்ணா நீ செய்த தான தர்மம் உனக்கு புண்ணியத்தை அளித்தது. எனினும் தர்மத்தை பற்றி தெரிந்தும் நீ அதர்மத்தின் பக்கம் துணை நின்றதால் நீ செய்த நல்ல காரியங்கள் எதுவும் உன்னைக் காப்பாற்றவில்லை.”
“உனக்கு ஏற்பட்ட அநீதி மிகக் கொடுமை தான். அது யாருக்கும் நடக்கக்கூடாது. உனக்கு கிடைத்த அபூர்வ திறமையை கொண்டு இனி ஒருவருக்கும் அநீதி நடக்காமல் இருக்க நீ போர் புரிந்தாயா? இல்லை. உலக நன்மைக்காக நீ போராடியிருந்தால் உன் வெற்றியை ஒருவரும் தடுத்திருக்க முடியாது. ஆனால் உன்னிடம் அவமானத்திற்காகப் பழிவாங்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது.” என்றார் கிருஷ்ணர்
கர்ணன் குந்தி தேவியின் மூத்த மகன். பாண்டவர்களுக்கு அண்ணன். இதை தவிர துரியோதனன் பற்றியும் நான் பிறகு சொல்கிறேன். ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனுடைய எண்ணங்களும், நட்பு வட்டாரங்களுமே தீர்மானிக்கின்றன. நந்தனா, இந்த விஷயத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்”, என்றார் அவள் தந்தை.
ஒரு நல்ல திரைப்படம், ஒரு குழந்தையின் சிந்தனையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போது, தற்போதைய சினிமா மற்றும் டிவி தொடர்களை அடிக்கடி பார்ப்பதன் மூலம் எத்தகைய எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமோ என்று எண்ணி கவலையில் ஆழ்ந்தார் அவள் அப்பா.
எனது முந்தைய பதிவுகள்
Good one Rams
Thanks Selva
Very good topic for children.
Thanks Rangarajan