- Mr. M.B. Sivaramakrishnan from Chennai has this question: “In Hindu tradition, ‘giving thithi’ or performing Shraaddham for deceased parents and ancestors is in vogue. As we also believe in reincarnation, how does this deed help our ancestors who might be born already elsewhere?”
Answer: Shraaddham (or ‘giving thithi’) denotes a ceremony that is carried out to remember and honour our deceased ancestors. Usually it is done for at least 3 generations of ancestors starting with one’s deceased parents. Shraaddham should be performed not only for spiritual reasons, but also for scientific and social reasons.
Let’s first try to understand why this ritual must be performed in the first place. To borrow Western parlance, just like Father’s day or Mother’s day, this is our
‘Ancestor’s day’. On this day, people remember their ancestors and recall their contribution towards building the family, society etc. Whatever we are, it is all
because of the efforts of our ancestors. This is not just a rhetoric, but also a scientifically proven theory.
To understand more, we have to know about a person named Gregor Mendel who is known as the father of modern genetics. Mendel is accredited as the first person to correctly understand how traits are inherited by offspring from parents. He put forward three conclusions which I have simplified below:
- Traits are passed on to an offspring from parents via genes (‘units of inheritance’).
- An offspring inherits traits from each parent (in varying degrees)
- Some traits may not be expressed in an individual but can still be passed on to the next generation
Thus it becomes clear that we inherit traits (intent, intellect, physique etc) not only from our parents but possibly from their parents as well (refer point 3
above). So it is only fair that we express our gratitude to them at least once a year (once a month for some).
Now coming to the second part of the question, what if they have acquired rebirth and possibly not able to partake our offerings? Chances are, most of our ancestors have attained salvation and might never be reborn. But we can never know that for sure. More importantly, as prescribed by Sri Velukkudi Krisnan Swami, these rituals are prescribed in our Sastras as deeds to be performed by us irrespective of the salvation status of our ancestors. (He jokingly adds, if the salvation status of our ancestors were to be in our hands, none of them can ever get Moksha!). So it becomes necessary that we perform this ritual as per prescribed rules.
Our glorious Sanathana Dharma also stipulates that while performing Shraaddham, the performer should not only pay homage to his ancestors but also to those whose lineage is no longer active and to those who didn’t know who their parents were. Thus this ritual takes care of all our ancestors altogether.
As always, our culture always believes in ‘Sarve Jana: Sukhino Bhavanthu” – let all the people in the world be happy!”.
Earlier questions in this series:
6. Why should we avoid certain foods before conducting auspicious events?
5. Should we follow mourning practices even for the demise of an unfamiliar relative?
4. Is there one holy book for Hindus?
3. Why should we light a lamp in our houses?
2. Should I wear only traditional dresses while visiting temples?
1. What if I don’t know the meaning of Mantras that I chant?
References
More about Gregor Mendel’s genetic theory
Sri Velukkudi Krishnan’s discourse on Shraaddham
Translation/தமிழாக்கம்
கேள்வி: திரு M B சிவராமகிருஷ்ணன் சென்னையிலிருந்து கேட்கிறார்,“நமது கலாச்சாரத்தில் நம் மூதாதையருக்கு ‘திதி கொடுப்பது’ அல்லது திவசம் செய்வது என்பது உள்ளது. ஒருவேளை அவர்கள் ஏற்கனவே மறு பிறவி எடுத்து இருந்தால் அவர்களுக்கு இந்த சடங்கு உபயோகம் இல்லாமல் போய் விடுமா?”
பதில்: திவசம் அல்லது திதி கொடுப்பது என்னும் சடங்கில் நாம் நமது பிரிந்த பெற்றோர்கள் உட்பட மூன்று தலைமுறை மூதாதையர்களுக்கு அஞ்சலி செய்கிறோம். இதில் வெறும் ஆன்மீக நோக்கம் மட்டும் இல்லாமல் அறிவியல் மற்றும் சமூகப் பார்வையும் அடங்கி உள்ளது.
முதலில் இந்த சடங்கை நாம் ஏன் செய்கிறோம் என்று பார்ப்போம் . இன்று நமது நாட்டில் அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று பல தினங்கள் உள்ளன. அது போல் இந்த சடங்கு தான் ‘மூதாதையர் தினம்’! இந்நாளில் நாம் நம் வம்சத்தார் நம்முடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகளை நினைவு கூர வேண்டும். அவர்களால் தான் நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கு அறிவியல் காரணங்கள் கூட உள்ளன.
‘க்ரிகோர் மெண்டில்‘ என்பவர் நவீன மரபியலில் தந்தையாக அறியப் படுகிறார். அவர் கீழ்கண்ட மூன்று கூற்றுக்களை முன்வைக்கிறார்:
- குழந்தைகளுக்கு பண்புகள் பெற்றோரின் மரபணுக்கள் மூலம் வந்து சேர்கிறது
- இரு பெற்றோர்களும் இதில் பங்கு பெறுகிறார்கள்
- சில சமயங்களில் பண்புகள் பெற்றோரின் உடனடி பிள்ளைகளைச் சேராமல் அவர்களின் பிள்ளைகளைச் சென்றடைகின்றன
நம் குணநலன்களில் (உடல்வாகு , சிந்தனைத் திறன்) நமது பெற்றோர் மற்றும் மூதாதையரின் பங்களிப்பு எவ்வளவு என்பதை இவற்றின் மூலம் நாம் அறியலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை அல்லவா ?
இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்குச் செல்லலாம். நம் மூதாதையர் ஒருவேளை மறுபிறவி எடுத்திருந்தால்? இருந்தால் என்ன? பொதுவாக நம் மூதாதையர் நற்கதியை அடைந்து இருக்கவே நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் ஒரு வேளை அவ்வாறு இல்லை என்றால் இந்தச் செயல் அவர்களுக்கு பயன்படும் அல்லவா! இதுவும் தவிர, திரு. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி தன் உபன்யாசத்தில் கூறுவது என்னவென்றால்,இந்த பித்ரு கார்யங்கள் எல்லாமே பகவானால் விதிக்கப் பட்டவை. எனவே அவற்றைச் சரிவர செய்வது நம் கடமையே தவிர இவற்றின் மூலம் தான் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது இல்லை .
இதில் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால் திதி கொடுக்கும் போது, அந்த நபர் தன் சொந்த மூதாதையருக்கு மட்டும் அல்லாமல், சந்ததி முடிந்தவர்கள், மற்றும் பெற்றோர் பற்றி தெரியாதவர்கள் என பலருக்கும் மரியாதை சமர்ப்பிக்கிறார். ‘சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற கூற்றுப்படி அனைத்து மக்களும் மகிழ்ந்து வாழ இது வழி வகுக்கிறது.
சனாதன தர்மம் தான் எத்தனை உயர்ந்தது!
முந்தைய கேள்விகள்
6. சடங்குகள் செய்யும் முன் உணவுக்கு கட்டுப்பாடு அவசியமா?
5. பரிச்சயமில்லாத உறவினரின் மரணத்திற்கும் சடங்குகளைப் பின்பற்ற வேண்டுமா?
4. ஹிந்துக்களின் புனித நூல் எது?
3. வீட்டில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம்?
2. கோயிலுக்கு செல்லும் போது பாரம்பரிய உடை தான் அணிய வேண்டுமா?
1. பொருள் தெரியாமல் ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்லலாமா?
குறிப்புகள்
கிரிகோரி மெண்டிலின் மரபியல்
திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் திவசம் பற்றிய சொற்பொழிவு
***