Simple Slokas for Children – Part 3 of 4

In the first and second part of this series, we learnt a few slokas on deities that are present in Vishnu temples.  In the next two parts, let us learn a few hymns on deities that are present in Shiva temples.  Please read on.. 

இந்தத் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நாம் விஷ்ணு கோயில்களில் உள்ள சில தெய்வங்களை பற்றிய துதிகளைப் பார்த்தோம். வரும் இரண்டு பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள சில கடவுள்களின் துதிகளைக் காணலாம். தொடர்ந்து படியுங்கள்..

Note: Please scroll down for English transliteration of these verses. 

சிவபெருமான் – ச்லோகம்  1
சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோதமம்
சிவ மார்க3 பிரணேதா3னம் பிரணதோஸ்மி சதா3ஷிவம்

ச்லோகம்  2
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

உமையாள் – ச்லோகம்  1
ஸர்வ மங்க3ள மாங்க3ல்யே சிவே ஸர்வார்த்த2 ஸாத4கே
சரண்யே த்ரயம்ப3கே கௌ3ரீ நாராயணீ நமோஸ்துதே!!

ச்லோகம் 2
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

விநாயகர்  – ச்லோகம் 1
மூஷிக வாஹன மோத3க ஹஸ்த  சாமர கர்ண விளம்பி3த சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர  விக்4ந விநாயக பாத3 நமஸ்தே

ச்லோகம்  2
பாலும் தெளித் தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா

முருகர்   – ச்லோகம்  1
ஓம் தத்புருஷாய வித்3மஹே மஹாஸேனாய தீ4மஹி
தன்ன ஷண்முக2: ப்ரசோத3யாத்

ச்லோகம்  2
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

பகுதி 1 மற்றும் பகுதி 2

***

Sivan – sloka 1
shivam shivakaram shaantham shivathmanam shivothamam
shivamaarga pranethaaram pranamaami sadaashivam

sloka 2
namachchivaaya vaazhga naadhan thaal vazhga 
imai podum yennenjil neengaadhan thaal vazhga
kokazhi aanda guru mani thaan thaal vaazhga
aagamam aagi nindru annippaan vaazhga
ekan anegan iraivan adi vaazhga

Uma – sloka 1
sarva mangala maangalye shive sarvaartha saadhake 
sharanye tryambake gauree naaraayanee namosthu te

sloka 2
dhanam tharum kalvi tharum oru nALum thaLarvariya manam tharum
deiva vadivum tharum nenjil vanjamillA inam tharum
nallana vellAm tharum anbar yenbavarukkae
ganan tharum pUngkuzhalAL abirami kadai kangaLae

Pillayar – sloka 1
mooshika vaahana modhaha hastha chamara karna vilambitha suthra
vamana rupa maheswara puthra vigna vinayaga padha namaste

sloka 2
paalum theli thenum paagum paruppum ivai
naalum kalandhunakku naan tharuven – kolanchei
thungak karimugathu thoomaniye neeyenakku
sangath thamizh moondrum tha

Murugar – sloka 1
Om tathpurushaya vidhmahe   mahasenaya dheemahi 
tanna shanmukha: prachodayat 

sloka 2
uruvai aruvai uladhai iladhai
maruvai malarai maniyai oliyai
karuvai uyirai gadhiyai vidhiyai
guruvai varuvai arulvai guhaney

Links to Part1 and Part 2

Click here for the final part. 

***

 

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *