In this series so far, we learnt a few hymns dedicated to Gods in Vishnu temples in part 1 and part 2. In part 3 we learnt a few verses on deities present in Shiva temples. This is the concluding part on the same.
I hope you found this 4-part series helpful in teaching your kids these simple slokas. They can now go in front of each deity in the temple and piously recite the respective slokas. May the Lord shower his unending blessings on your family!
Do write to us if you have any comments or suggestions in the comments box and we assure you that we will read all of them and implement as well.
இது வரை இந்தத் தொடரில் முதலில் விஷ்ணு கோயில்களில் உள்ள கடவுள்களைப் பற்றிய துதிகளையும் (பகுதி 1 மற்றும் பகுதி 2), பிறகு சிவன் கோயில்களில் உள்ள தெய்வங்களின் ஸ்லோகங்களில் சிலவற்றையும் (பகுதி 3) பார்த்து உள்ளோம். இனி மீதமுள்ள சில தெய்வங்களின் துதிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தத் தொடர் மூலம் உங்கள் குழந்தைகள் பல ச்லோகங்களைக் கற்பார்கள் என்று நம்புகிறேன். இனி கோயில்களுக்குச் செல்லும் போது ஒவ்வொரு சந்நிதியின் முன்அவர்களால் ஒரு துதியேனும் சொல்ல முடியும். பகவான் அனைவருக்கும் பல நன்மைகள் அருள பிரார்த்திப்போம்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைத் தவறாமல் comments’ல் பதிவு செய்யுங்கள். நன்றி!
***
சரஸ்வதி – ச்லோகம் 1
சரஸ்வதி நமஸ்துப்4யம் வரதே3 காம ரூபிணி
வித்3யாரம்ப4ம் கரிஷ்யாமி சித்தி4ர் ப4வது மே சதா3
ச்லோகம் 2
வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப்பணி பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச்
சரியாசனம் வைத்த தாய்!
துர்கை – ச்லோகம் 1
ஓம் காத்யாயனாய வித்3மஹே கன்யகுமாரி தீ4மஹி
தன்னோ து3ர்கி: ப்ரசோத3யாத்
ச்லோகம் 2
மாதா பராசக்தி வையமெல்லம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.
ஐயப்பன் – ச்லோகம் 1
ஓம் பூ4தநாதா2ய வித்3மஹே ப4வ நந்தநாய தீ4மஹி
தன்ன: சாஸ்தா ப்ரசோத3யாத்
ச்லோகம் 2
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சத்குருநாதனே சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
சித்தி விநாயக சிவசக்தி வடிவேலன் தம்பியே சரணம் ஐயப்பா!
தக்ஷிணாமூர்த்தி
கு3ரவே சர்வ லோகானாம் பி4ஷஜே3 ப4வ ரோகி3ணாம்
நித4யே சர்வ வித்3யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
நந்தி தேவர்
ஓம் தத்புருஷாய வித்3மஹே சக்ர துண்டா3ய தீ4மஹி
தந்நோ நந்தி3: ப்ரசோத3யாத்
நவகிரகம்
ஆதி3த்யாய ச ஸோமாய மங்களாய பு3தா4ய ச
கு3ரு ஷுக்ர ஷனிப்4யஷ்ச ராஹவே கேதவே நம:
***
Saraswathi – sloka 1
saraswathi namasthubyam varadhe kaamaroopini
vidhyaarambham karishyaami siddhir bhavathu me sadha
sloka 2
vellai kalai uduthi vellai pani poondu
vellai kamalathil veetriruppaal vellai
ariyaasanathil arasarodu ennai
sariyaasanam vaitha thaai
Durgai – sloka 1
Om kathyaayanaaya vidhmahe kanyakumaari dheemahi
thanno durgi: prachodayaath
sloka 2
mAthA parAsakthi vaiyamellam nI niRaindAy
AdhAram unnaiyallAl Aremakkup pArinilE
EdhAyinum vazhinI solvAy emadhuyirE
vEdhAvin tAyE! migappaNindhu vAzhvOmE
Iyappan – sloka 1
Om bootha nathaaya vidhmahe bhava nandhanaaya dheemahi
thanna: saastha prachodayaath
Sloka 2
swamiye saranam iyappa
sadhgurunathane saranam iyappa
villaali veerane saranam iyappa
siddhi vinayaka Sivasakthi vadivelan thambiye saranam iyappa
Dhakshinamurthy
gurave sarva lokanam bhishaje bhava roginam|
nidhaye sarva vidhyanam sri dakshinamurthaye namaha ||
Nandhideva
Om tathpurushaya vidhmahe chakrathundaaya dheemahi
thanno nandhi: prachodhayaath
Navagraham
aadithyaayacha somaaya mangalaaya budhaayacha |
guru shukra shanibhyascha raahuve kethave namah ||
***
வெள்ளைக் கலையுடுத்தி…. என்று தொடங்குவது கம்பர் எழுதிய நேரிசை வெண்பா. அதை ஒழுங்காக வெண்பா வடிவில் வெளியிடவும்.
— ஶ்ரீமுஷ்ணம் சிவா