Continuing from the last part, here are some more verses on Gods whose shrines are present in Vishnu temples. Before we look at them, we at Thedal, wish you a Very Happy 73rd Independence day! Scripture says ‘Janani Janmabhoomishcha svargath api gareeyasi’ which means mother and motherland are superior even to heaven. Let’s stay united and continue to follow our Dharma on a daily basis.
Let’s see how many of you can make your kids chant these slokas. As proof you can share the recording with us and we will be glad to publish them here at Thedal.
இதுவரை விஷ்ணு கோயில்களில் உள்ள தெய்வங்களைப் பற்றிய சில ச்லோகங்களைக் கற்றோம். மேலும் செல்வதற்கு முன், அனைவருக்கும் எங்கள் தேடல் பக்கம் சார்பில் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே”, என்ற பாரதியின் கூற்றுப்படி நாட்டையும் நம் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்.
உங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த சுலோகங்களைக் கற்றுத் தருகிறீர்கள் என்று பார்க்கலாமா? நீங்கள் விரும்பினால் உங்கள் குழந்தைகளின் ஒப்பித்தலை எங்களுக்கு அனுப்புங்கள், தேடலில் மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறோம்!
இனி ச்லோகங்களின் தொடர்ச்சி:
Note: English transliteration is at the end of Tamil version.
ஆஞ்சநேயர் – ச்லோகம் 1
அஸாத்4ய சாத4க ஸ்வாமின் அஸாத்4யம் தவ கிம் வத3|
ராம தூ3த க்ருபா ஸிந்தோ4 மத் கார்யம் ஸாத4ய ப்ரபோ4 ||
ச்லோகம் 2
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆருயிர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்
சக்கரத்தாழ்வார்
சுத3ர்ஷன மஹாஜ்வாலா ப்ரஸீத3 ஜக3த: பதே |
தேஜோ ராஸே ப்ரஸீத3 த்வம் கோடி சூர்ய அமித: பிரப4 ||
நரசிம்மர்
உக்3ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முக2ம் |
ந்ருஸிம்ஹம் பீ4ஷணம் ப4த்3ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||
ஹயக்ரீவர்
ஞானானந்த3 மயம் தே3வம் நிர்மல ஸ்ப2டிகாக்ருதிம் |
ஆதா4ரம் சர்வ வித்3யாநாம் ஹயக்3ரீவம் உபாஸ்மஹே ||
கருடன்
குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து3 த3வலாய ச |
விஷ்ணுவாஹ நமஸ்துப்4யம் பக்ஷிராஜாய தே நம: ||
விஷ்வக்சேனர்
யஸ்யத்விரத வக்ராத்4யா: பாரிஷத்3யா: பரஷ்ஷதம் |
விக்4னம் நிக்4னந்தி சததம் விஷ்வக்சேனம் தமாஷ்ரயே ||
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ் பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
இராமானுஜர்
வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் – வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் * தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை
***
Anjaneyar – sloka 1
asAdhya sAdhaka swAmin asAdhyam tava kim vadha |
rAma dhootha kripA sindhO madh kAryam sAdhaya prabhO ||
sloka 2
anjile ondrai petran anjile ondrai thaavi
anjile ondraaraaga aariyarkaaga egi
anjile ondru petra anangai kandayalar ooril
anjile ondrai vaithan avan emmai alitthuk kaappan
Chakrathazvar
sudarshana mahajwala praseedha jJagatha pathe |
thejo raase praseedha thwam koti surya amitha prabha ||
Narasimhar
ugram viram mahavishnum jvalantam sarvato mukham |
nrisimham bhishanam bhadram mrityumrityum namamy aham ||
Hayagrivar
gyanananda mayam devam nirmala spatikaa kruthim |
aadharam sarva vidyaanaam hayagrivam upaasmahe ||
Garudan
kunkumaankitha varnaya kundendu davalaaya cha |
vishnuvaaha namastubyam pakshirajaayathe namaha ||
Vishvaksenar
yasyadviratha vakthradhyaa: parishadya parashatam |
vighnam nighnanthi sathatham vishvaksenam thamaashraye ||
Azhwars
AzhwArgal vAzhi aruLichcheyal vAzhi
thAzhvAdhumil kuravar thAm vAzhi – yEzhpArum
uyya avargaL uraiththavaigaL thAm vAzhi
seyyamaRai thannudanE sErndhu
Ramanujar
vAzhi ethirAsan vAzhi ethirAsan
vAzhi ethirAsan ena vAzththuvAr vAzhiyena
vAzththuvAr vAzhiyena vAzththuvAr thALiNaiyil
thAzhthuvAr viNNOr thalai
***
Click here for part 3.
sitram siRu kaalE vandhu unnai sEviththu un
potraamarai adiyE pOtrum poruL kELaay
petram mEyththu uNNum kulaththil piRandhu nee
kutru Eval engaLai(k) koLLaamal pOgaadhu
itrai(p) paRai koLvaan anRu kaaN gOvindhaa
etraikkum Ezh Ezh piRavikkum un thannOdu
utrOmE aavOm unakkE naam aatcheyvOm
matrai nam kaamangaL maatrElOr embaavaay – Andal
Thanks Ramakrishnan for the nice Thiruppavai pasuram.