Recently, I was speaking to my friend, Mrs. Shoba Senthilkumar from Chennai who was recollecting her childhood days. She was mentioning that whenever she visited a temple she and her friends used to chant slokas pertaining to each deity in each shrine and how they competed with each other in remembering such slokas. Come to think of it, that’s how I also learnt a lot of hymns. Today we rarely witness kids doing the same. Thanks to her, I am planning to come up with a list of simple slokas for deities that we normally find in our local temples. In the first two parts of this series, I will cover verses for Gods that we find in Vishnu temples while the remaining two parts will cover slokas pertaining to Gods in Siva temples. This is a good chance for parents to teach their kids these verses and make them chant while they visit temples.
சமீபத்தில் கல்லூரித் தோழி திருமதி. ஷோபா செந்தில்குமார், அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் தன் சிறு வயதில் கோயில்களுக்குச் சென்ற அனுபவங்களைப் பற்றிச் சொல்லுகையில் எப்படி நண்பர்களுடன் கோயிலுக்குச் சென்று ஒவ்வொரு சந்நிதியிலும் உள்ள தெய்வத்திற்கு முன் ஒரு ச்லோகம் சொல்லி யார் அதிக ச்லோகங்களைச் சொல்கிறார்கள் என்று போட்டி போட்டுக் கொள்வார்கள் என்று விவரித்தார். பார்க்கப் போனால் எனக்குமே அந்த அனுபவம் உள்ளது. ஆனால் இன்றைக்கோ குழந்தைகள் அப்படி சுலோகங்கள் சொல்கிறார்களா என்று தெரிய வில்லை. எனவே தோழியின் கோரிக்கை பேரில் நமது கடவுள்கள் மீதுள்ள எளிய ஸ்லோகங்களை தொகுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். மொத்தம் நான்கு பாகங்களாகப் பிரித்து முதை இரண்டு பாகங்களில் விஷ்ணு கோயில்களில் உள்ள கடவுள்களின் ச்லோகங்ககளையும் அடுத்த இரண்டு பாகங்களில் சிவத் தலங்களில் உள்ள தெய்வங்களைப் பற்றிய ச்லோகங்களையும் தொகுக்க உள்ளேன். தவறாமல் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இவற்றைக் கற்றுக்கொடுத்து கோயில்களில் ஓதச் சொல்லுங்கள்!
Note: Please scroll down to get English transliterated version of slokas.
லட்சுமி – ச்லோகம் 1
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||
ச்லோகம் 2
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம்போல் மேனி அழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே!
சா’ந்தாகாரம் புஜகச’யனம் பத்மநாபம் ஸுரேச’ம்|
விச்’வாதாரம் ௧௧னஸத்ருச’ம் மேகவர்ணம் சு’பாங்கம் ||
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்-த்யானகம்யம்|
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் ||
மேகச்’யாமம் பீதகெளசே’யவாஸம் ஸ்ரீவத்ஸாங்கம் கெளஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸ்ர்வலோகைகநாதம் ||
ச்லோகம் 2
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
ஆண்டாள் – ச்லோகம் 1
ஸ்ரீவிஷ்ணுசித்த குல நந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரி சந்தன யோக திருஷ்யாம்
சாக்ஷத் க்ஷமாம் கருணையா கமலாமிவான்யாம்
கோதாம் அனன்ய சரண: சரணம் ப்ரபத்யே
ச்லோகம் 2
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
இராமர் – ச்லோகம் 1
ராமாய ராமபத்ராய ராமச்சந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நமஹ
ச்லோகம் 2
மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ
கிருஷ்ணர் – ச்லோகம் 1
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
ச்லோகம் 2
கண்ணன் திருவடி,எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே
தருமே நிதியும். பெருமை புகழும்
கருமா மேனிப், பெருமா னிங்கே
***
Lakshmi – verse 1
padmasana sthithe devi parabrahma swaroopini
parameshi jagan mata mahalakshmi namostu tey
verse 2
ponnarasi naaraNanaar devi pugazarasi
minnu navarathinam pol meni azagudaiyaaL
annai aval vaiyamelam aatharippaaL Sridevi
thanniru potraaLe charaN pugundhu vazvomey!
Vishnu – Verse 1
shanthakaram bhujaga-shayanam padmanaabham suresham |
vishvaakaaram gagana sadrusham megevarnam shubhangam ||
lakshmikantham kamalanayanam yogihrudhyanagamyam |
vande vishnum bavabhaya-haram sarvalokaikanatham ||
meghashyamam peetha-kauseyavasam sreevatsajkam kaustubhod-bhasithangam !
punyopetam pundarikaya thaksham vishnum vande sarvalokaika natham ||
Verse 2
pallANdu pallANdu pallAyiraththANdu
pala kOdi nURAyiram
mallANda thiN thOL maNivaNNA! un
sEvadi sevvi thirukkAppu
Aandal – verse 1
sri vishnuchitha kula nandana kalpa valleem,
sri rangaraja harichandana yoga drusyaam,
saakshaath kshamaam karunayaa kamalamivaanyaam,
godhaam ananya charana: saranam prapadye
verse 2
thiruvADip pUraththu segaththudhiththAL vAzhiyE
thiruppAvai muppadhum ceppinAL vAzhiyE
periyAzhwAr petreDuththa peN piLLai vAzhiyE
perumpudhUr mAmunikkup pinnAnAL vAzhiyE
oru nUtru nARpaththu mUnRuraiththAL vAzhiyE
uyararangaRkE kaNNiyugandharuLiththAL vAzhiyE
maruvArum thirumalli vaLa nADi vAzhiyE
vaNpudhuvai nagark kOdhai malarp padhangaL vAzhiyE
Ramar – verse 1
ramaya ramabhadraya ramachandraya vedhase
raghunaathaya naathaya sitayaah pataye namah
verse 2
mannu pugazh kosalai than mani vayiru vaaithavane ,
thennilangai kon mudigal chinthuvithai SemPon cher,
kanni nan maa mathil pudai choozh kana purathu en kan maniye ,
yennudaya innamudhe raghavane thaalelo
Krishnar – verse 1
vasudeva-sutaḿ devaḿ kaḿsa-chāṇūra-mardanam
devakī-paramānandaḿ kṛiṣhṇaḿ vande jagadgurum
verse 2
kaNNan tiruvaDi eNNuga maname tiNNam azhiyA vaNNam tarumE
tarumE nidhiyum perumai pugazhum karu mAmEnip-perumAn ingE
***
Click here for the second part.
Good one Ranga…much needed in today’s context..I will try to teach them for my kids..
Good ones Ranga. I personally is reminded of those early age where we used to recite daily
Thanks Ranga for the Tamil slokas. Always wanted to learn a few .
Thanks very much Renga. I am glad you find this useful.
Thanks Bala. Yes, trying to revive it with today’s generation.
Thanks for the idea and your feedback Shoba.
Hello,
There are individual Gayathri mantras pertaining to each deities, which will be much easier for children.
Hello Ramaswamy, thanks for the great suggestion. I will look into including those as well.