எங்கள் பள்ளியில் சான்றோர் உபன்யாசம் (உரை) என்பது வழக்கமான ஒன்று. உரையின் முடிவில் நன்றி கூறும் தருணம், தைத்ரிய உபனிஷதில் வரும் “ஆனந்தோ ப்ரஹ்மே திவ்யஜானாத்” என தொடங்கும் மந்திரத்தை சொல்லி உரை நிகழ்த்தியவருக்கு மரியாதை செய்து நன்றி தெரிவிப்பது வழக்கம்.
அந்த ஸ்லோகம்:
आनन्दो ब्रह्मेति व्यजानात् । आनन्दाध्येव खल्विमानि भूतानि जायन्ते ।
आनन्देन जातानि जीवन्ति । आनन्दं प्रयन्त्यभिसंविशन्तीति ।
सैषा भार्गवी वारुणी विद्या । परमे व्योमन्प्रतिष्ठिता ।
स य एवं वेद प्रतितिष्ठति । अन्नवानन्नादो भवति । महान्भवति प्रजया पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या
மேற்கூறிய ஸ்லோகத்தின் பொருளை அறிந்து கொள்ளும்முன் அதன் கதையைப்பார்ப்போம்.
இறைவனும் இயற்கையும் வேறு என்ற கருத்து நிலவுகிறது. நம் வேதங்களும், உபனிஷத்களும், இதிஹாச புராணங்களும் இரண்டும் ஒன்றே என்று உணர்த்துகின்றன. அதற்கு இக்கதை ஒரு சான்று.
ப்ருகு முனிவர் தன் தந்தை வருணபகவானிடம் (நீருக்கு அதிபதி) பிரம்மத்தை உணரும் வித்தையை போதிக்குமாறு பணிவுடன் கேட்கிறார்.
வருணபகவான் “தியானம், தவம் ஆகியவற்றின் மூலம் பிரம்மத்தை சுயமாக உணரமுடியும்” எனக்கூறி சில குறிப்புகளை அளித்தார்.
பிரம்மத்திலிருந்தே ஜீவராசிகள் பிறக்கின்றன, வாழ்ந்து மடியும்போது அந்த பிரம்மத்திடமே சென்றடைகின்றன, எனவே ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுமாறு ப்ருகுவை கேட்டுக்கொண்டார்.
தந்தை சொல்படி செய்த ப்ரஹு முதலில் “அன்னமே பிரம்மம்” என உணர்ந்தார். அதில் முழுத்திருப்தி இல்லாததால், தொடர்ந்து தியானத்தில் மூழ்கினார். இப்பொழுது “ப்ராணமே பிரம்மம்” என உணர்ந்தார். அதிலும் முழுத்திருப்தி இல்லாததால், தொடர்ந்து தியானத்தில் மூழ்கினார். மேலும் மனம், விஞ்ஞானம் என்ற நிலைகளைத்தாண்டி “ஆனந்தமே பிரம்மம்” என்பதை உணர்ந்தார்.
ப்ருகு ஒவ்வொரு கட்டத்திலும் உணர்ந்தது நமக்கு அடிப்படை உண்மையை உணர்த்துகிறது.
அன்னம் (உணவு) நம் உடலின் எரிபொருள். ப்ராணம் (மூச்சுக்காற்று) இருக்கும் வரை நாம் வாழ்கிறோம், அது நாம் வாழும் சூழலை குறிக்கிறது. நாம் நன்றாக வாழ தரமான உணவும் காற்றும் அத்யாவசியங்கள்.
மனம் என்பது எண்ணங்களையும் குறிக்கோள்களையும் உணத்துகிறது. விஞ்ஞானம் ஆழ்ந்த அறிவை குறிக்கிறது. ஒருவருக்கு அத்யாவசிய தேவைகள் பூர்த்தியாகும்பொழுதே எண்ணங்கள், குறிக்கோள்கள், அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். இறுதியாக ஆனந்தம் என்ற நிலை இவை அனைத்தையும் உணர்வதே. தொடக்கத்தில் உள்ள ஸ்லோகம் ப்ருகுவின் சுய உணர்தலே.
பொருள்:- ஆனந்தமே பிரம்மம் என்பதை உணர்ந்தார், அந்த ஆனந்தத்திலிருந்தே அனைத்து ஜீவராசிகளும் ஜனித்தன, (மரித்த)பின் அதற்குள் ஐக்கியமாகின்றன. இந்த அறிவே உச்ச நிலை, இதை உணர்ந்தவர் அனைத்து செல்வங்களையும் அடைந்து உயர்ந்த நிலையை எட்டி ஞானியாகிறார்.
பிரம்மம் என்பது “ப்ரம்”
என்ற சொல்லிலிருந்து பிறந்தது. “ப்ரம்” என்பதன் பொருள் “விரிவடையும் தன்மையுடையது.”
தொடக்கத்தில் வெறுமை (ஒன்றும் இல்லாத்தன்மை) மட்டுமே இருந்தது, அதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், புவி, தாவரங்கள், ஜீவராசிகள் என அனைத்தும் வந்ததாக தைத்ரிய உபனிஷத் கூறுகிறது. இதில் முதல் ஐந்து பஞ்சபூதங்களைக்குறிக்கிறது.
நவீன விஞ்ஞானிகளும் இந்த அண்டம் தோன்றியதைப்பற்றி ஏறக்குறைய இதே கருத்தை முன்வைக்கின்றனர்.
நாம் சொல்லும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் பெரும்பாலும் கதை மற்றும் உரையாடல்களே, அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.
எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு மந்திரத்தின் கதை மற்றும் பொருளை இங்கு பதிவிட்டுள்ளேன். இதைப்படிக்கும்போது தங்களுக்கு ஏதேனும் நினைவிற்கு வந்தால் இங்கு (Comments) பகிர்ந்து கொள்ளவும்.
I always compare this with Maslow’s hierarchy of needs – Physiological, safety, love, self-esteem and finally self-actualization..
In many ways Maslow’s theory is in line with upanishad. What is even more fascinating is the the theory put forth by Stephen Hawking and Leonard Mlodinow in their book “The Grand Design” –
“Because there is a law such as gravity, the universe can and will create itself from nothing. Spontaneous creation is the reason there is something rather than nothing, why the universe exists, why we exist. It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going”.
You can also read my blog https://madhalaisexpression.wordpress.com/2016/04/28/realisation-is-bliss/