Today is Thaipusam day, a special day for Lord Murugan. Goddess Parvati Devi bestowed the spear (Vel) to Lord Murugan to destroy the demons. It is special to recite Kanda Sashti Kavasam, Kanda Guru Kavasam, Shanmuga Kavasam today and receive the grace of Lord Murugan. Even if we are unable to chant all these, we can get the grace of Lord Murugan by just thinking about him for few minutes.
Here is a Quiz about Lord Murugan. Let’s make our children learn interesting facts about Lord Murugan that even many of us are unaware of!
இன்று தைப்பூச திருநாள். முருகப்பெருமானுக்கு விசேஷமான நாள்.
இன்று தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கி அருளினார். இன்றைய தினத்தில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசத்தை பாராயணம் செய்து முருகப்பெருமானின் அருளை பெறுவது விசேஷம்.
முருகப்பெருமானை சில நிமிடங்கள் மனதில் நினைத்தாலே அவரின் அருள் கிடைக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. இங்கே உள்ள இந்த வினாடிவினா பதிவின் மூலம் பலரும் அறிந்திராத முருகன் கோயில்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாமே!