எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் (Arise, Awake and stop not till the goal is reached)
ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோள்களில் மிக முக்கியமான ஒன்று
அவர் கடோபனிஷதின் சாரத்தை உணர்த்தும் ஒரு முக்கியமான ஸ்லோகத்தை பல உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். அதில் மிக முக்கியமானது, 12 நவம்பர் 1896 அன்று லாகூரில் ஆற்றிய உரை.
அந்த ஸ்லோகமும் அதன் பொருளும்:
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत,
क्षुरासन्न धारा निशिता दुरत्यद्दुर्गम पथ: तत् कवयो वदन्ति |
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத
ஷுராஸன்ன தாரா நிஷிதா துரத்யத்துர்கம பதஹ தத் கவயோ வதந்தி
பொருள்: – எழுவாய்! விழிப்பாய்! சிறந்தவரை (குரு) அணுகி கற்றுக்கொள்வாய். அறிவார்ந்தவர்களின் கூற்றுப்படி அது ஒரு வாளின் கூரிய முனை போன்றது, அதில் செல்வதோ அதை கடப்பதோ மிகக்கடினம்.
எமனுக்கும் நசிகேதஸுக்கும் நடந்த உரையாடலே கடோபனிஷத். அதன் கதையையும், உட்பொருளையும் முந்தய பதிவில் பார்த்தோம்.
அதன் சாரம்:
எமனிடம் சென்ற நசிகேதஸ் மூன்று நாட்கள் காத்திருந்தான். வீடு திரும்பிய எமன் தனது சேவகர்கள் மூலம் அறிந்து, உடனே சந்தித்து, விருந்தினர் என்ற மரியாதையுடன் “தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி, ஒரு விருந்தாளியை காக்க வைத்த பாபத்திலிருந்து விடுபட நான் அளிக்கும் மூன்று வரங்களை தயை கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.”
புன்னகையுடன் ஏற்றுகொண்ட
நசிகேதஸ் “என்னை நீங்கள் என் தந்தையிடம் திருப்பி அனுப்பும்பொழுது நான் இறந்து மீண்டும்
உயிர் பெற்று வந்ததாக நினைக்காமல் என்னை அமைதியுடன், எந்த வித கோபமோ வருத்தமோ இல்லாமல்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.” முதல் வரத்தை அளித்தார்
எமதர்ம ராஜன்.
“தர்மராஜனே, சுவர்கத்தில்
அனைவரும் வயோதிகமோ மரண பயமோ இல்லாமல் மனநிறைவுடன் வாழ்கிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்,
தயவு செய்து அதன் ரகசியத்தை தாங்கள் கற்றுத்தருவீர்களா?”
“அது பிரபஞ்சத்தின் சக்தி (அக்னி), அது அனைவருக்குள்ளும் இருக்கிறது. அந்த அக்னியை அகத்திலோ, புறத்திலோ ஏற்ற முடியும். பரப்ரம்மத்தை நினைத்து உள்ளத்திலோ, அதன் முன் நின்று பூக்கள் முதலியவை மூலமோ, வேள்வியின் மூலமோ ஏற்ற முடியும்” எனக்கூறி அந்த மந்திரத்தை உபதேசித்தார்.
நசிகேதஸ் அதை மீண்டும் கூறிய விதத்தில் மனம் மகிழ்ந்த எமதர்ம ராஜன், “இன்று முதல் அது நசிகேதஸ் அக்னி என்று அழைக்கப்படும். அதை மூன்று முறை ஏற்றுபவர் ‘ஜனன மரண’ பந்தத்திலிருந்து விடுபடுவர். முக்திக்கு அதே வழி.”
அது என்ன மந்திரம் என்று அந்த உபனிடதத்தில் இல்லை. ஆனால் எமதர்ம ராஜன் விளக்கத்தில் குறிப்பு உள்ளது என்று எடுத்துக்கொள்ளளாம்.
மேலும் மூன்று முறையின் முக்கியத்துவத்தை முந்தயபதிவில் பார்த்தோம்
“மரணத்திற்கு பிறகு ஆன்மாவின்
நிலை என்ன? ஏதுமில்லை என்றும், ஏதோ இருக்கிறது என்றும் கூறுகின்றனர். அதைப்பற்றி அறிவதே
மூன்றாவது வரம்”
“அது மிகவும் நுட்பமானது,
தெளிவில்லாதது, எனவே தயவு செய்து வேறு ஏதாவது கேளுங்கள்”
“இதை நன்றாக அறிந்தவர்
முன் நிற்கிறேன் என அறிவதில் மகிழ்ச்சி, இதைவிட மேலானது ஏதுமில்லை,”
“நான் உனக்கு இந்த உலகில்
அனைத்தையும் அளித்த பிறகும் நீ கவனமாக பரிசீலித்து உனக்கு நன்மையானதை தேர்ந்தெடுத்தாய்.
முக்திக்கான மந்திரத்தை அறிந்த பிறகும் (இரண்டாவது வரம்) நீ ஆத்மாவின் ரகசியத்தை தெரிந்துகொள்ள
நினைக்கிறாய்.”
“ஆத்மா அழிவில்லாதது, அது அனைத்திலும் இருக்கும், உடல் ஆத்மா வாழும் கூடு. மரணத்திற்குப் பின் ஆத்மா வேறொரு பிறவிக்குத் தயாராகும். கர்ம வினைக்கேற்ப பிறவி எடுக்கும். இந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து ஆத்மா விடுபட முடியும்.”
“இந்த உலகத்தில் இரண்டு
பாதைகள் உண்டு. ஒருவர் எந்த பாதயை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஷ்ரேய (श्रेय) – அறிவு சார்ந்த பாதை,
ப்ரேய (प्रेय) – ஆசை சார்ந்த பாதை.”
“பகுத்து அறிந்து பார்க்கும் தன்மை (விவேகம்) சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும். ஆசை என்றுமே இனிமையான விஷயங்களுக்கு மயங்கும், காரணம், அது அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது. நாம் கண்ட, கேட்ட, கடந்து வந்த அனுபவம் நமக்குக் கைகொடுக்கும்.”
“பிரம்மத்தை உணர ஏழு நிலைகளை முதலில் உணர வேண்டும். அவை அர்த்தம் (பொருள்), இந்திரியம் (புலன்கள்), மனம், புத்தி, ஆத்மா, அவ்யக்தம், புருஷா.
முதல் நாங்கு நிலைகள் நம்மால் எளிதாக அறிய முடியும். உயர்ந்த நிலை என்பது ஆத்மா, அவ்யக்தம் மற்றும் புருஷா எவ்வாறு தொடர்புடையது என்று உணர்வதே.”
“வாழ்கை பொருளில் தொடங்கி புத்தியில் முடிவடைகிறது. மனிதர்களின் புரிதல் அவ்வளவே. எவனொருவன் அந்த மூன்று முடிச்சிக்களை அவிழ்க்கிறானோ அவனே பிரம்மத்தை உணரத் தகுதியாகிறான்.”
“ஆத்மா ஜீவாத்மா என்று அறியப்படுகிறது. புருஷா இந்த அண்ட சராசரத்தின் ஆத்மா, அதை பரமாத்மா என்று அறிகிறோம். இதனிடையில் உள்ள அவ்யக்தம் என்ற நிலை “வெளிப்படுத்தப்படாத உண்மை”. ஆத்மா, அவ்யக்தம், புருஷா ஆகிய நிலைகளின் தொடர்பை உணர்ந்தவர்களே முக்தி நிலை அடைகின்றனர்.”
இவ்வாறு எமதர்ம ராஜன்
விளக்கினார்.
நல்ல முயற்சி. மேலும் சிறப்பாக இருப்பதற்கு சிறுவர்கள் படிக்கும்படி சிற்ச்சில நீதிக் கதைகளையும் சேர்த்து பதிவிடடால் பயன் அளிக்கும் என்பது எனது கருத்தாகும். அன்புடன் கண்ணன்.புவனேஸ்வர்.
upanishad stories are more relevant even today.