இந்த கலியுகத்தில் கடவுளைக் காண முடிவதில்லை. அப்படியென்றால் நாம் எவ்வாறு இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு வருகிறது. அந்த கவலையைப் போக்க வந்த உபாயமே கடவுளின் நாமமாகும். தவிர கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மோட்சத்திற்கு வழி என்று ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் கூறப்பட்டு இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ரிஷிகளும், பக்தர்களும் சாமான்யர்களும் கூட பகவான் நாமத்தை உச்சரித்து நற்கதி அடைந்ததை நாம் கண்டிருக்கிறோம். இதோ சில உதாரணங்கள்:
ரத்னாகரன் என்கிற திருடன் நாரதரிடம் உபதேசம் பெற்று ராம நாமத்தை ஜெபித்ததன் மூலம் இராமாயணம் என்ற ஒரு மகோன்னதமான இதிகாசத்தைப் படைக்க முடிந்தது.
சேதுக்கரையில் இராமன் இட்ட கற்கள் கடலில் மூழ்க அனுமன் ராம நாமத்தை எழுதிய கற்கள் கடலில் மிதந்த விருத்தாந்தம் நாம் அனைவரும் அறிந்ததே
பற்பல பாவங்கள் செய்த அஜாமிளன் மரணத்தருவாயில் தன் மகன் நாராயணனை அழைக்க அதை பகவான் தன்னை அழைத்ததாகக் கொண்டு அவனை நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த யமதூதர்களைத் திரும்பச் செய்து அஜாமிளனுக்கு வைகுண்டம் கிட்டச் செய்த கதை மிகவும் பிரபலம் ஆகும்.
வைணவ ஆச்சார்யரான ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய வ்யாக்யானத்தில் இவ்வாறு வேடிக்கையாகக் கூறுகிறார். ” கோகுலத்தில் கண்ணன் கோபிகைகளுடன் கூட இருந்த போது அவர்களுடைய ஆடைகளை ஒளித்து வைத்து விளையாடி மகிழ்ந்தான். அதனால் அவன் கூட இருந்தால் ஆடை நஷ்டமாவதே மிச்சம் என்று தெரிகிறது. ஆனால் அதே சமயம் ஹஸ்தினாபுரத்தில் திரௌபதியின் வஸ்திரம் களையப்படும் போது அவள் கண்ணன் நாமத்தை உச்சரிக்க அளவில்லா ஆடைகள் கிடைக்கப் பெற்றாள். இதிலிருந்தே அவன் இருந்தால் ஆடை போய் விடுகிறது, ஆனால் அவன் பெயரைச் சொன்னால் ஆடை கிடைக்கிறது”, என்று ஹாஸ்யமாக ஸ்வாமி குறிப்பிடுகிறார்!
இந்த காலத்திற்கு ஏற்றார் போல் கூற வேண்டும் என்றால் பகவான் என்பவர் 24 காரட் தங்கம் போன்றவர் என்றும் பகவான நாமம் என்பது 22 காரட் என்றும் கூறலாம். ஏனென்றால் 24 காரட் தங்கம் மிக்க விலை உயர்ந்தது தான் என்றாலும் அதை பயன் படுத்த முடியாது, ஆனால் 22 காரட் என்றால் அதைப் பல விதங்களில் மாற்றி நமக்கு ஏற்றார் போல் பயன் படுத்தலாமே ! பகவான் நாமமும் அப்படி பட்டதே.
ஜெய் ஸ்ரீ ராம் !
குறிப்பு : ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் ‘கலியுக தர்மம்’ உபன்யாசத்தில் இருந்து சில பகுதிகள் எடுத்தாளப் பட்டுள்ளன.
Nice explanation
Thanks Swamin.
Good post. Also very apt post as it relates to the last week’s incident during MP s oath taking ceremony .
Thank you! Jai Shri Ram!
Good post
Thanks Ramki!
good one
Thanks Ram.
nice one
Thanks Swamin..
Sir Super
Thanks mama!