To read in English, click here
கேள்வி: மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களின் பொருள் தெரியாத நிலையில் அவற்றைச் சொல்லுவதால் ஏதும் பலன் உள்ளதா?
பதில்: மிக நல்ல கேள்வி! ஆச்சர்யம் என்னவென்றால் இதே கேள்வியை நாம் ஒரு மின்னணு சாதனத்தை உபயோகிக்கும் போது கேட்பதில்லை! ஏதோ விஞ்ஞானி கண்டு பிடித்தார், நான் உபயோகிக்கிறேன் என்று சொல்லி கடந்து போய் விடுகிறோம்.
சரி, அது போகட்டும், இதே கேள்வியை அன்பர் ஒருவர் காஞ்சி பரமாச்சார்யாரிடம் எழுப்பினார். அதற்கு பரமாச்சாரியார் அந்த அன்பரை நோக்கி, “உங்களுக்கு அஞ்சல் அட்டையில் எழுதும் பின் கோட்டைப் பற்றி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர், தெரியாது என்றார். உடனே ஆச்சாரியார் அது போஸ்டல் இண்டெக்ஸ் நம்பர் என்றும், விலாசம் தெளிவாக இல்லை என்றாலும் அனுப்புனர் அந்த எண்ணை எழுதி இருந்தால் அஞ்சல் சரியான இடத்துக்குச் சென்று சேரும் என்கிறார். அதாவது பின் கோட்டைப் பற்றி தெரியா விட்டாலும் அதை எழுதினாலே அதற்கு பலன் என்று கூறி புன்முறுவல் பூத்தார். அதே போல தான் மந்திரங்கள் ஜபிப்பவர்கள் பொருளை அறியாமல் ஜபித்தாலும் பலத்தை அளிக்க வல்லனவாகும்.
மேலும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி கூறுகிறார் – “ நெருப்பு என்றால் என்னவென்றே அறியாத ஒருவன் அதில் கை வைத்தாலும் அது சுடுகிறது. அவன், எனக்கு அதன் தன்மை தெரியாததால் அது என்னை சுடக் கூடாது என்று கேட்க முடியுமா? நெருப்பின் தன்மை சுடுவதாகும். அது போல மந்த்ரங்கள் மற்றும் ஸ்லோகங்கள் எப்போதும் பலன் தரக் கூடியவை. அது சொல்பவர்களின் அறிவைச் சார்ந்தது அல்ல “, என்கிறார். மகாபாரதத்தில் இதனாலேயே துர்வாச மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை விளையாட்டாய்ச் சொன்ன குந்திக்கு சூரியதேவனால் கர்ணன் பிறந்தான்.
எனவே முழு மனதோடு எந்த மந்திரத்தையும் பாராயணம் செய்தால் பொருள் விளங்கா விட்டாலும் பலன் நிச்சயம்.
Very nice explanation, similarly I read another explanation somewhere – even though a small child pronounce the milk improperly or without knowing the meaning the mother understand it, similarly the supreme power looks only at dedication and sincerity.
Thanks Jana. Brilliant analogy. Thanks for sharing.