இறைவனை வழிபட எளிய வழி

இறை வழிபாடு செய்வதில் பல நல்ல பயன்கள் உள்ளன. இதன் மூலம் நம் மனம் ஒரு நிலை பெறுகிறது. நாம் உற்சாகத்துடன் வேலை செய்யவும், வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளவும் வழிபாடு உதவுகிறது. மேலும் இறைவனிடம் பக்தி உள்ளவர்கள் பிறரைக் காயப்படுத்தி, குறுக்கு வழியில் இலக்கை அடைய முயல மாட்டார்கள்.

Tirupathi Thedal

இறை வழிபாட்டில் பல வகைகள் உள்ளது. தினந்தோறும் த்யானம் செய்வது, ஸ்லோக மந்திரங்கள் சொல்வது, அருகிலுள்ள கோவிலுக்குச் செல்வது, தர்ம காரியங்களில் ஈடுபடுவது போன்ற வழிகளை நம் பெரியோர்கள் கூறி கேட்டிருப்போம். இவைகளில் குழந்தைகளை (அதுவும் இந்தக் கால குழந்தைகளை) ஈடுபட வைப்பது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது. குழந்தைகளை மகிழ்ச்சியோடு இறை வழிபாட்டில் ஈடுபடுத்த சுலபமான வழி அவர்களை கதை கேட்க வைப்பது. இறைவனின் மகிமைகள் மற்றும் இறைவனுக்கு தொண்டு புரிந்த பல அடியார்களின் கதைகளை கேட்பதும் படிப்பதும் இறைவனை அடைவதற்கான ஒரு வழியே ஆகும். இதற்கு பல உதாரணங்கள் நம் புராண கதைகளில் இருக்கிறது.

  • தன்னை பகவான் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு பிரஹலாதன் வணங்கியதால் பகவான் நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை கொன்றார். அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இருந்த காலம் முதலே, நாரத மஹரிஷி வாயிலாக நாராயணனின் கதைகளை கேட்டதே பிரஹலாதனின் நம்பிக்கைக்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.
  • சிறுவயதில் தன் தந்தை பெரியாழ்வாரிடம் கதைகள் கேட்டதின் பலனாகவே திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியை உலகிற்கு அளித்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக வணங்கப்படுகிறார் ஸ்ரீ ஆண்டாள்.

இன்றோ கற்பனைக் கதைகளில் உருவாகும் திரைப்படங்களை பார்த்து நம் குழந்தைகள் தங்கள் மனதில் நடிகர்களைப் பற்றி ஒரு பெரிய எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதற்கு பதிலாக விநாயகர், முருகர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ஆதி சங்கரர், ராமானுஜர், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் போன்ற அடியார்களின் கதைகளை சிறு வயதிலிருந்தே கேட்பது, மற்றும் படிப்பதின் மூலம் குழந்தைகள் இறை வழிபாட்டில் தங்களைத் தானாகவே ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

முன்பு வெளிவந்த ‘திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் இந்த ஆழமான கருத்தை அனைவரும் புரிந்துக்கொள்ளும் விதமாக சில காட்சிகளில் காண்பித்திருப்பார்கள். ஒரு அரசன் தன் தவறை உணர்ந்து மனதை ஒழுங்கு படுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று தன் ஆஸ்தான புலவரிடம் கேட்பான். மேலும் கடவுள் எங்கு உள்ளார், என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்பன போன்ற அவனுடைய கேள்விகளுக்கு அந்த புலவரின் பேத்தி பதில் அளிக்கும் காட்சி ரசிக்கும்படியாக இருக்கும். காட்சியின் இறுதியில் அந்த அரசன் இறை வழிபாட்டில் ஈடுபட முடிவு செய்து முதலில் இறைவனுக்கு தொண்டு புரிந்த அடியார்களின் கதைகளைப் படிக்க துவங்குவான். அந்த காட்சிகளை இங்கு கண்டு மகிழுங்கள்!

முழு திரைப்படத்தின் இணைப்பு: திருவருட்செல்வார்
இந்த காட்சிகள் அனைத்தும் படத்தின் முதல் 10-15 நிமிடங்களில் வருகின்றன.
Thedal Subscription

Note: Once you update your email id, you have to confirm the subscription by clicking the link sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *