சனாதன தர்மம் என்றால் என்ன?

Click here to read in English. 

இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது  மதத்தைத் தாண்டிய விஷயமாகும். 

சனாதனம் என்பதற்கு ‘புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம்.   இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட ) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.சனாதன தர்மத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை பார்ப்போம். 


Sanathana Dharma
சனாதன தர்மம்

உண்மை உரைத்தல்

நமது வேத நூல்களில், உண்மை பேசுவது பற்றி பல மேற்கோள்கள் உள்ளன.  உபநிஷதங்களில் ‘சத்யம் வத‘ (உண்மையைப் பேசு) போன்ற வரிகள் உள்ளன. கீழே உள்ள நீதி ஸ்லோகமும் இதையே குறிப்பிடுகிறது:

“சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் சா ந அன்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சனாதன: “

அதாவது, “சத்தியமும் இனிமையும்  வாய்ந்தவற்றைப் பேசவேண்டும்.  உண்மையாய் இருப்பினும் கடுமையாக இருப்பதை பேசக் கூடாது. அதைப் போல இனிமையானதும் பொய்யானதையும் கூட பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்.”

ஸ்ரீராமர் மற்றும் ராஜா அரிச்சந்திரனின் கதைகள் இந்தக் கருத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

பெரியவர்களை மதித்தல்

வேதங்களில் வயது முதிர்ந்தவர்களை மதித்தல் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தைத்திரீய உபநிஷத்தில் கூறப் பட்டவைகளில் முக்கியமானவை கீழே:

“மாத்ரு தேவோ பவ ; பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ ; அதிதி தேவோ பவ “

இந்த கலாச்சாரத்தில் தாய்-தந்தையர், குரு மற்றும் விருந்தினர்களுக்கு ஒரு மேன்மையான இடம் உண்டு. இன்றும் வீட்டில் ஒரு நல்ல சம்பவம் நடக்கும் போது நாம் நம் வீட்டு பெரியவர்களின் ஆசி பெற்றே அந்த செயலைத் தொடங்குகிறோம் அல்லவா ?

சுத்தம் பேணுதல்

நமது நூல்களில் சுகாதாரம் பேண விவரமாக பல விதிகள் உள்ளன. உதாரணமாக,  கழிப்பறைக்கு செல்லுதல் , கிரகணம் போன்ற நிகழ்வுகள் முதலானவைக்குப் பிறகு  குளித்தல் மிக அவசியமாகக் கருதப்படுகிறது. அதைப்  போல நோயாளிகள், முதியவர்கள் ஆகியவர்களிடம் பேசும் பொது இடைவெளி கடைபிடித்தல், துக்க நாட்ககளில் பிரிவு அனுஷ்டித்தல் போன்றவை பற்றிய பல குறிப்புகளும் நம்மிடம் உள்ளன. நம்முடைய (பிறரைத் தொடாமல்) கை கூப்பி வணங்கும் பழக்கம் ஒன்றே நம்முடைய சுகாதாரம் பேணும் முறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

Bathing in a river

உணவின் பங்கு

நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. எந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம், எவற்றைச் சேர்க்கக் கூடாது, எவற்றை அன்றே உண்ண வேண்டும்  முதலான பல விதிமுறைகளை நாம் அதில் காணலாம். அதே போல  மஹாபாரதத்தில் வரும் சுக்ராச்சாரியார் மற்றும் கச-தேவயானி விருத்தாந்தம் மது வகைகளின் தீமை பற்றித் தெளிவாக விளக்குகிறது.


அஹிம்சைக்கு முக்கியத்துவம்

அஹிம்சை நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும். ‘அஹிம்சா பரமோ தர்ம:’ (அஹிம்சையே மேலான தர்மம்) என்பது நமது கோட்பாடாகும். எனவே தான் நாம் பசு முதலிய விலங்குகளுக்கு நாம் இறை ஸ்தானம் தருகிறோம். ஜீவகாருண்யத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் நாம் துளசி போன்ற செடிகளின் இலைகளை பறிக்கும் முன் நாம் ஸ்லோகம் சொல்லி மன்னிப்பு கோருகிறோம்.

www.sringeri.net

ஒழுக்கமான வாழ்க்கை

நமது வாழ்க்கையானது அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய பேறுகளை உள்ளடக்கியது. இவற்றைச் சரிவர பின்பற்றி வாழ்ந்தோமானால் வாழ்க்கை இனியதாக இருக்கும். அப்படி இல்லாமல் பொருள் மற்றும் பிற இன்பத்தில் மனதை செலுத்தினால் வாழ்வில் துன்பமே மிஞ்சும். இதையே ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இப்படி குறிப்பிடுகிறது.

“அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்”    “ஏதத் மாம்சவஸாதி விகாரம்”

“பொருளைக் கண்டு மயங்காதீர் “, ” உடல் மீது உள்ள ஆசை நிலை இல்லாதது”

ஒரு கடவுள், பல வடிவங்கள்

சனாதன தர்மத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று – கடவுள் ஒன்றே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால் தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, த்யானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் நம் மதத்தில் இடம் இருக்கிறது. புத்தம், சமணம், சீக்கிய மதம் போன்ற கிளை மதங்கள், சாக்தம், சைவம், வைணவம் போன்ற குறிப்பிட்ட கடவுள் வழிபாடு முறைகளையும் நாம் இங்கு காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனாதன தர்மத்தை கடைபிடிக்க முடியும். உதாரணமாக, இராமாயணத்தில் சக்கரவர்த்தி தசரதரின் அரசவையில் ஜாபாலி முனிவர் இத்தகைய கருத்துக்களை உடையவரே. எனினும் அரசவையில் வசிஷ்டர் முதலியவர்கள் நடுவில் அவரும் மதிக்கப் பட்டார். 

ஆன்மிகத்தில் அறிவியல்

பண்டைய கால மக்கள் ஆன்மிக வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும், அறிவியல் உண்மைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பாணினி சம்ஸ்க்ருத இலக்கணத்திற்கான முதல் நூலை இயற்றினார். பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.  சுஷ்ருதர் மருத்துவத் துறைக்கு பெருஞ்சேவை செய்திருக்கிறார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும்  பொருளுடையதாக இருக்கிறது.  இவர்கள் அனைவரும்  சனாதன தர்மத்தை வளர்த்தவர்களே.

www.ancientpages.com

உலக அமைதியே நோக்கம்

நம் ஆன்மிக நூல்கள் அனைத்திலும்  உலக நன்மையே  பிரதான நோக்கமாக உள்ளது. அமைதி என்பது ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு சமூகத்திக்காக மட்டும் அல்லாமல் இந்த ப்ரபஞ்சத்துக்கே ஏற்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாகும். அதுவும் மனித குலத்திற்கு மட்டும் அன்றி பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை ஏற்பட நாம் விரும்புகிறோம்.

ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி: !

பரிணாம வளர்ச்சி

ஒன்றை கவனித்தோமானால் காலப் போக்கில் பல சாம்ராஜ்யங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன வழக்கொழிந்து நசித்து போனதை உணரலாம். இதற்கு பல காரணங்கள் இருந்த போதும் மிக முக்கிய காரணம் அவை சூழலின் மாற்றத்திற்கேற்ப மாறாததே ஆகும். நம் நாகரீகம் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. ஆனால் இன்றும் அது தழைத்து வீறு நடை போட்டு வருகிறது. நாம் காணாத ஆபத்துக்களா, அனுபவிக்காத இன்னல்களா! எனினும் காலத்தின் சுழற்சியோடு நாம் மேன்மேலும் வலுப்பெற்றே வருகிறோம். 

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களை பார்த்தோமானால், பெரும்பாலானவைகளில் கடவுள் பற்றிய குறிப்பை நாம் பார்க்கவில்லை.  ஒரு வாழக் கூடிய வழியே நம் கண்களுக்குத் தெரிகிறது. எனவே தான் சனாதன தர்மம் என்பது ஒரு வாழும் முறையே அன்றி ஒரு மதம் அல்ல என்று நாம் கூறுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்போமாக!


Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

31 thoughts on “சனாதன தர்மம் என்றால் என்ன?”

   1. Beautiful and very very clean explanation. Very very important for all. Great job. God bless you and your family and friends.

 1. சனாதன என்பது வேதத்தில் எங்கேனும் செல்லப்பட்டுள்ளதா?

  1. எனக்குத் தெரிந்த மட்டில் இல்லை. ஏனெனில் சனாதனம் என்பதற்கு பழமையான என்று பொருள். அந்த சொல்லாடல் வேதம் உருவான நேரத்தில் சொல்லக்கூடியதல்ல அல்லவா? ஒரு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அதைப் பழமையான மரம் என்று கூற முடியும். ஆனால் அது உருவான நேரத்தில் அதை ஏன் பழமையான மரம் என்று குறிப்பிடவில்லை என்று கேட்க முடியாது அல்லவா?

 2. “சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். அற வழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும் நேரடி சம்பந்தம் இல்லை.” என்று google chrome ல் காட்டுகிறது சரியா

  1. அவ்வாறு குலம் காட்டுவதைச் செய்ய வேண்டுவது இல்லை என்று பகவானே சொல்லும் மேற்கோள் இருக்கும் போது கூகுளை நம்ப வேண்டுமா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

  2. அவ்வாறு குலம் காட்டுவதைச் செய்ய வேண்டியது இல்லை என்று பகவானே சொல்லும் மேற்கோள் இருக்கும் போது கூகுளை நம்ப வேண்டுமா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

 3. சனாதனம் என்பது மதம் சம்மந்தப் பட்டதல்ல என்றாலும், மதவாதிகள் குறிப்பாக இந்து மதம் சார்ந்தவர்கள் தான், ஏற்றத்தாழ்வு, குலம், கோத்திரம் எனக்கருதி தவறான முறையில் அதனைப் பயன்படுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட விளக்கங்களில் கூட, உதாரணம் காண்பிப்பது, வணக்கத்துக்குரிய சத்திரிய, சூத்திரர்களைத்தான் என்பதை அறியலாம். ‘ஆன்மீகத்தில் அறிவியல்’ என்பதை கேள்வி கேட்பதால் மட்டுமே அறியமுடியும். ஆனால் கேள்வி கேட்பவர்களை நாத்திகர்கள் என ஒதுக்கி விடுகிறோம். விஞ்ஞானம் இன்று அனைத்திற்கும் நிரூபணம் வைத்துள்ளது. மேலும் இந்துமதம் என தூக்கிப் பிடிப்பதை, காஞ்சி ஆச்சாரியாரே, அப்படி ஒரு மதம் இல்லை. அது வெள்ளையர்களால் வழக்கில் வந்தது என்று எழுதி உள்ளார் அகிம்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து பசு வணக்கத்துடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால், குதிரையை வைத்து அசுவமேத யாகம் செய்துள்ளது தெரிகிறது. இந்துமதம் என்பது ஒரு கணக்கீட்டிற்காக பல மதங்களின் கூட்டுச் சேர்க்கை. இந்து மத கோட்பாட்டில், சைவம், வைணவம் … பங்கு வகிக்கிறது. இதில், கொள்கை நடைமுறையில் சைவம் என்றாலே, ஜீவ காருண்யத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால், மதக் கலவையான இந்துமதத்தில் அசைவ பழக்கம் உள்ளவர்களே மிக அதிகம். சைவ வழக்கம் உள்ள மக்கள் மிகவும் சொற்பமே. அப்படியானால், அந்த மெஜாரிட்டி மக்கள் எந்த மதமாக இருக்கக்கூடும்? எனவே, இந்து சமூகம் என பிரிவினை, ஏற்றத்தாழ்வு, சாதி, பகை ஏற்படுத்தி, அரசியலுக்காக மக்களை ஒருவித இருக்கமான சூழலில் வைத்து நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கப்படுவது தவிர்க்க பட வேண்டும்.
  மேலும், அந்தணர்களை உயர்த்திப் பிடிப்பதும் ஒரு வகையாக உள்ளது. அதுவும் தவறு. பாரதத்தில், அந்தணர்கள், சத்திரிய அரசர்களை அண்டிப் பிழைத்தவர்களாக, அவர்களின் தான தர்மத்தில் ஜீவித்தவர்களாகவே தெரிகிறது.
  யுகம் தோறும் மாற்றம் உண்டு என்றும் அப்போது பகவான் அவதாரம் எடுப்பதாக கீதை கூறுகிறது. “மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால்”தான், சனாதனத்தை உயர்த்தி பிடித்து அமைதி குலைகிறது. இன்றைய சனாதனம் அப்பட்ட அரசியல். ஏற்றத்தாழ்வை உயர்த்திப் பிடிக்கும் அடாவடித்தனம், அகந்தை, அடக்குமுறை.

  1. தங்கள் கருத்துக்கு நன்றி. எல்லாவற்றிலும் போல இங்கும் சில மனிதத் தவறுகள் நடந்திருக்கலாம். அவற்றை ஒதுக்க வேண்டியது அவசியமே. இந்த மதத்தில் கேள்வி கேட்டது/கேட்பது போல வேறு எந்த மதத்திலுமே கேள்விகள் இல்லை. வேத காலத்தில் இருந்தே நாத்திக கேள்விகள் இருந்து வந்துள்ளன. அவற்றுக்குப் பல குருமார்கள் அறிவுபூர்வமாகவும் பொறுமையாகவும் பதில் தந்துள்ளார்கள்.அவற்றைப் படிக்க நமக்கு தான் பொறுமை இல்லையோ என்று தோன்றுகிறது. காஞ்சி பெரியவர் என்ன சொன்னார் என்பதை நன்றாகப் படித்தால் அவர் சொன்னது விளங்கும். அவர் ஹிந்து மதம் என்ற பெயரில் அது வழங்கப் படவில்லை என்று கூறினாரே தவிர, அப்படி ஒரு மதம் இல்லவே இல்லை என்று கூறவில்லை. ஜீவகாருண்யம் என்பது மேலானதாகக் கூறப்பட்டது, ஆனால் மாமிசம் உண்பவர்களை வெறுத்து ஒதுக்கும் படி சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. கண்ணப்ப நாயனார் மாமிசத்தை சிவனுக்குப் படைத்தார், தன் பக்தியினால் நாயனாராக உயர்ந்தார். சைவம் என்றால் சிவனை வணங்குவோர் என்பது தான் பொருள். நாம் அதைப் புலால் உண்ணுதலோடு சேர்த்து விட்டோம். அவரவர் தங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அவ்வளவே (சாதி மற்றும் வர்ணங்கள், இந்த சமூகம் சீராகச் செயல் பட மிக அவசியம். ஆனால் இவை பிறப்பினால் வருவது இல்ல, அவரவர் குணங்கள் மற்றும் தொழில்கள் மூலம் ஏற்படுகிறது – பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுவது இதுவே).

   இன்று அந்தணர்களை உயர்த்திப் பிடிப்பவர்கள் யார் என்று தயவு செய்து கூறுங்கள். அவர்கள் பிறரை விட உயர்ந்தவரும் இல்லை அதே சமயம் யாருக்கும் தாழ்ந்தவரும் இல்லை. இது அனைத்து வர்ணத்தாருக்கும் பொருந்தும். யாரோ ஒருவர் தவறு செய்து இருந்தால், அவருடைய வர்ணத்தையே சாடுவது எவ்வாறு சரியாகும். இன்று உலகில் பல இடங்களில் நிகழும் பயங்கரவாத செயல்களுக்கு ஒரு சாராரைச் சாடுவது சரியாகுமா?

   சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிப்பது மிகச்சிறியே. ஏனெனில் எது அனைவருக்கும் நல்லதோ அதுவே சனாதன தர்மம். வர்ணாசிரமமோ, தீண்டாமையோ, மூடப் பழக்கவழக்கமோ சனாதனம் இல்லை. பதிவை பொறுமையாகவும் முழுமையாகவும் படிப்பவர்களுக்கு இது தெளிவாக விளங்கும்.

   1. உங்கள் பதிலில் காஞ்சி பெரியவர், இந்து மதம் என்று அழைக்கப்படவில்லை, ஆனால் அப்படி ஒரு மதம் இல்லவே இல்லை என்று கூறவில்லையே மழுப்பலான பதிலை தந்துள்ளீர்கள். அப்படி என்றால் காஞ்சி பெரியவர் குறிப்படும் மதத்தின் பெயர் என்ன? ஒழுக்கம், பண்பாடு , உண்மை, அன்பு, மனிதம் என தமிழ் கூறும் நல்லுலகில் வேதங்களுக்கு முன்பே கூறப்பட்டுள்ளதை மறுக்கின்றீர்களா என தெரியவில்லை. ஒவ்வொரு யுகமும் கல்ப கோடி ஆண்டுகள் என்றால் மனிதன் எந்த கல்பத்தில் தான் விலங்கிலிருந்து வேறுபட்டவன் என உணர ஆரம்பித்தான். திருக்குறளையும், நாலடியார் கூறிய கருத்துக்களைவிட மற்ற நூல்களில் கூறியதாக தெரியவில்லை. ஒவ்வொரு நொடிக்குள்ளும் ஒரு மாற்றம் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. தமிழரின் கூற்றுப்படி அறம், பொருள்,இன்பம் வீடு பயக்கும் என்பதுதான் உண்மை. சனாதனம் என்பது பழமையை புதுப்பித்தல் அல்ல. புதுப்பித்ததை பழமையாக்க முற்படுவது.

    1. தங்கள் கருத்திற்கும் பதிவிற்கும் நன்றி. ஆதிசங்கரர் மதத்திற்கு பெயரைக் குறிப்பிடவில்லை தான். ஒருவருக்கு ஒரே மகன் என்று வைத்துக் கொள்வோம். அவனை அவர் எப்போதும் ‘மகனே!’ என்று கூப்பிடுகிறார். மற்றவர்களிடமும் ‘என் மகன்’ ‘என் மகன்’ என்கிறார். அனைவருக்கும் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று விளங்குகிறது. ஏனென்றால் அவருக்கு வேறு மகன்கள் இல்லை. அதற்காக, அவர் தன் மகனுக்கு பெயர் வைக்கவே இல்லை என்று நாம் எடுத்துக்கொள்ள முடியுமா? அவர் காலத்தில் இருந்த ஒரே மதம் சனாதனமான மதம் மட்டுமே (அது தமிழ் சார்ந்த மதமாகவும் இருந்திருக்கலாம்).

     என்னைப் பொறுத்தவரையில் தமிழ் நூல்கள் முதலில் தோன்றியவையா அல்லது வேதங்கள் முதலில் தோன்றினவா என்பது முக்கியமில்லை. அவற்றின் சாரம் ஒன்றே. இரு மொழி நூல்களயும் பயின்றவர்கள் இதனை அறிவார்கள். யார் அவற்றில் கூறப்பட்டவைகளைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் சனாதனிகளே (அல்லது நீங்கள் அவர்களுக்கு தமிழில் ஒரு பெயர் வழங்கலாம்).

     அறம் பொருள் இன்பம் வீடு என்பதே தர்மம் அர்த்தம் காமம் மற்றும் மோக்ஷம் என்பது. இரண்டும் ஒரே விஷயத்தையே குறிப்பிடுகின்றன அல்லவா?

     புதுப்பித்தததை பழமையாக்குவது என்றால் என்ன? அப்படியென்றால் எது பழமையானது என்கிறீர்கள்?

   2. அய்யா சனாதன தர்மத்தில் குறிப்பிட்டுள்ள 10 வகை தர்மத்தில் வர்ணாசிரம தர்மம் என்ற ஒன்றும் உண்டு அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்தான் இன்றுவரை இந்து சமயத்தில் உள்ள கோவில்களில் தீண்டாமை உள்ளது ஒருசிலரை அனுமதிப்பதும் ஒரு சமூகத்தை ஒதுக்குவதுமாக உள்ளது சனாதனத்தில் உள்ள வருணாசிரமதர்மத்தை தூக்கிப்பிடிப்பதால்தான் சாதியை ஒழிக்கமிடியவில்லை… மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு …. ஒரு தேவாலையத்தில் எந்த ஒரு கிருத்தவனும் உள்ளே செல்ல முடியும், ஒரு மசூதியில் எந்த ஒரு முஸ்லிமும் உள்ளே செல்ல முடியும் ஆனால் சனாதன தர்மத்தில் உள்ள வருணாசிரம முறையை பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள உயர் சாதியினராக சொல்லப்படுகிறவர்கள் கட்டியுள்ள ஒருசில கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் நுழைய முடியுமா? என்பது கேழ்விக்குறிதான் இதனால்தான் சனாதனம் எதிர்க்கப்படுகிறது மனிதனில் ஏற்றத்தாழ்வினை களையவே சனாதனம் எதிர்க்கப்படுகிறது என்பது என் கருத்து.

  2. ஓரளவு சனாதனத்தை விளக்கினீர்கள் ஆனால் நடைமுறையில் சனாதனம்,வருணாசிரமம் மனுஸ்மிரிதி இவை இந்துமதத்தினடிப்படை என்பது பழைய மகாப் பெரியவர் வாக்கு மட்டுமல்ல இன்றைய அந்தனர்கள் பெரும்பாலானோரின் எண்ணமும் அதுதான் என்ன சப்பைக் கட்டுக் கட்டினாலும் இந்துமதம் ஒரு தனிமதம் அல்ல. இவர்கள் கட்டமைக்கும் இந்துமதம் என்பது வைதீக மதத்தின் மறு பதிப்பே அது மேற்சொன்ன மூன்ரின் அடிப்படையில் அமைந்ததே கொடுமை என்னவென்?ரால் வைதீகமதம் ஒருசாராரைத் தூ
   க்கிப் பிடிப்பதே

 4. Sanadana means Veda or Sruthi. Dharma means what? Baghavan incarnated to establish dharma. Many misunderstand that the War at Gurukshrtra guided by Baghavan is mission dharma. Duryodana adamant refusal to give due sharexto His cousins is wrongly construed as Adharma. Nothing! If that is so, how Duryodana could reach heaven and being offered with a seat of pearl even before Yudhistra reaches heaven. ,,(read last chapter of Mahabhartha). The holy Geetha bestowed by lord which dispelled the fear of death to Arjuna is dharma. The art of overcoming death is Dharma. Lord comes eon after eon only to help mankind to overcome dharma. How to over come death and what is art of deathless life. Pls read the book Absolutely about the Absolute or மெய் பொருள் kanbadu arivu

  1. Thanks for your comments sir. Will read the book that you have recommended when I get some time.

 5. Imaginary figures are not only for worshipping. They have many scientific reality, we have to understand the real meaning. But we are enjoying it in daily life without understanding. If we understand the truth of it we will be speechless and become a saint.

 6. Even scriptures and epics can also interpreted .If you see a dog ..That’s all.if you see the stone..That’s also o.k.This is also sanathanam..If u go to temple u can see the God.Then if you go to God man,nobody bother you.so,the living with freedom,is also democracy.

 7. Sanadhana tharmam is only belongs to Brahminism, those who follows Bagat Gita which says humen brith differentiated by four level 1. Brahmins (born on head means – who does priests, intelligent jobs and innovators like veda, puranas) 2. Sathiriyan (Shoulder -means warriors) 3. Vaishiyan (hip -means business people) 4. Shuthras (leg -means labors) and even god Krishna can’t change unlike Thiruvalluva says “By birth all men are equal. Differences in their action Render their worth unequal.”

  1. Thanks for your comment. Please provide which verse in Bhagavad Gita that indicates human birth is differentiated by 4 levels especially with body parts. It is nice to do our own research so that we are not misled by faulty information provided by others. Thanks.

 8. தங்களின் பொறுமைமிக்க
  அறுதியான பதில்கள்
  பாராட்டுக்குரியவை. மாற்று
  மதத்தினரும் நாத்திகரும்,
  இந்து மதத்தை அதற்குப் பொருந்தாத
  மனுஸ்மிருதி வருணாஸ்ரமம்
  இவற்றைக்கொண்டு தாக்கி
  அழித்துவிடலாம் என்று
  முயல்கிறார்கள்.தங்களைப்
  போன்றோர் அவர்களுடைய
  விதண்டாவாதக் கேள்விகளுக்குத்
  தக்கபதிலிறுத்து அவர்களால்
  இந்துக்களின் மனங்களில்
  எழுந்துள்ள ஐயங்களைப் போக்கி
  இந்து மதத்தின் மீதான பிடிப்பினை
  உறுதிப்படுத்தவேண்டும்!
  நன்றி.

  1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா !

 9. பாரதத்தின் ஆணி வேரே சனாதன தர்மம் ஐயா. அற்புத விளக்கம். வாய்மையே வெல்லும். நித்திய கடமைகள், அஹிம்சை, பொறுமை, அன்பு, உயரிய குணங்கள் இவையே சனாதனம்.. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போதிப்பதும் அறவழியில் பொருள் ஈட்டி இன்பம் துய்த்து முத்திபேறு பெறுவது தான் சனாதனம். அன்பே சிவம்.

 10. அய்யா சனாதன தர்மத்தில் குறிப்பிட்டுள்ள 10 வகை தர்மத்தில் வர்ணாசிரம தர்மம் என்ற ஒன்றும் உண்டு அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்தான் இன்றுவரை இந்து சமயத்தில் உள்ள கோவில்களில் தீண்டாமை உள்ளது ஒருசிலரை அனுமதிப்பதும் ஒரு சமூகத்தை ஒதுக்குவதுமாக உள்ளது சனாதனத்தில் உள்ள வருணாசிரமதர்மத்தை தூக்கிப்பிடிப்பதால்தான் சாதியை ஒழிக்கமிடியவில்லை… மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு …. ஒரு தேவாலையத்தில் எந்த ஒரு கிருத்தவனும் உள்ளே செல்ல முடியும், ஒரு மசூதியில் எந்த ஒரு முஸ்லிமும் உள்ளே செல்ல முடியும் ஆனால் சனாதன தர்மத்தில் உள்ள வருணாசிரம முறையை பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள உயர் சாதியினராக சொல்லப்படுகிறவர்கள் கட்டியுள்ள ஒருசில கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் நுழைய முடியுமா? என்பது கேழ்விக்குறிதான் இதனால்தான் சனாதனம் எதிர்க்கப்படுகிறது மனிதனில் ஏற்றத்தாழ்வினை களையவே சனாதனம் எதிர்க்கப்படுகிறது என்பது என் கருத்து.

  1. ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி. வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள், நான் எழுதிய கீழ்கண்ட பதிவை படிக்கலாம்.

   https://thedal.info/varnashrama-in-sanatana-dharma/

   மனிதன் எம்மதத்தைச் சேர்ந்தவனானாலும் தன் விருப்புவெறுப்புகளால் ஏவப்பட்டே தவறுகளைச் செய்கிறான். இதற்கு மதம் (எம்மதம் ஆனாலும்) பொறுப்பாக முடியாது. ஒரு மதத்தை சேர்ந்த ஒருவர் மகானாக இருக்கிறான். அதே மதத்தைச் சேர்ந்த ஒருவன் இழி காரியங்களைச் செய்வதையும் பார்க்கிறோம். எனவே ஒருவன் தன் மதத்தில் இருந்து எதைக் கற்கிறான் என்பதே முக்கியமாகிறது.

   பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. தங்கள் தீர விசாரித்தால் தங்களுக்கு அது தெளிவாகும். ஆனால் அதற்காக நான் அம்மதங்களை குற்றம் கூறப்போவதில்லை. (மேல் பத்தியை மீண்டும் படிக்க)

   ஆகம விதிகள் உள்ள கோயில்கள் பல உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளாமல் சம உரிமை என்னும் போர்வையில் புரட்சி செய்தல் தீமையிலேயே முடியும். இராமானுஜர் போன்ற மகான்கள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ள பழக்கங்களை ஒழித்த வண்ணமே வந்துள்ளனர். இன்று சனாதனம் விதவை மறுமணத்தை ஏற்கிறது. கடல் கடந்து செல்ல அனுமதிக்கிறது. பெண்கள் பூசாரிகளாக இருக்க அனுமதிக்கிறது. அறிவு சார்ந்த எந்த விவாதத்தையும் சனாதனம் மறுத்ததில்லை.

 11. what is mean by agama vidhi? why you guys are so obsessed in it? why cant everyone get an equal right on “Agama vidhi” temples? why cant SC/ST community people are not allowed? this is not sanadhana dharma.. this is the feeling of “Superiority” & “Inferiority” problems from the upper class hegemony. No one is inferior or low in terms of temples also. we know other religions have also flaws but they are far better when compared so called “Hinduism”/ “Sanadhana” dharma. I am also the so called “Upper class” which i am ashamed of being in that. I am an athiest and i will never believe any religions especially “Hinduism”. We have to learn Ambedkar on how not to use “Sanadhana” as means of dominance over the suppressed.

  1. Thanks for your comments. Many of us also don’t know what is involved in Pharmacology or Microbiology. But we won’t ask for equal rights as a surgeon in the operating room because everyone has equal rights. If we spend enough effort to study medicine (or Agama sastra) we will get better clarity. Most of our time is spent in parroting what others say about such things than trying to explore what these are really about. Swami Vivekananda started as an agnostic before he was drawn towards Sanatana Dharma when he put his mind to it. Everyone’s time will come when they can get their enlightenment. SC/ST community also have a share of their deities (equal to God) inside the temples by the way. Please research Thirumazisai Azhwar, Thiruppanazhwar, Kannappa Nayanar etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *