ஆசை, அவா, விருப்பம் முதலியவை நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் சொற்கள். ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் ‘நீ விரும்பும் பொருள்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதச்சொன்னார். ஒரு மாணவனின் கட்டுரையின் முதல் வரியைப்படித்து சற்று வியந்தார்.
“ஆசைப்பட்டு வாங்கினேன், புத்தர் சிலை” என்ற பொருள் பொதிந்த அந்த வரி அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது. “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்ற புத்தர்பெருமானின் கூற்று அனைவரும் அறிந்ததே.
திருமந்த்ரத்தில் வரும் இப்பாடல் ஆசையைப்பற்றி தெளிவாக விளக்குகிறது:
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே
நம்மில் பலரின் வாழ்க்கைப் பாதையை தீர்மானிப்பதில் ஆசை பெரும் பங்கு வகிக்கிறது. ஆசைக்கு அளவுகோல் வைத்துக்கொண்டு பேராசை என்றும் ஆசை என்றும் வகைப்படுத்துகிறோம். ஆசையைப்பற்றி பழமொழிகள், கதைகள், அறிவுரைகள் என ஏராளமுள்ளன. மகாபாரதத்தில் ஒரு கதையைப் பார்ப்போம்.
அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி தன் கணவன் மாமன்னன் யயாதியுடன் ஒரு வனத்தில் உலாவிக்கொண்டிருந்தாள். வழியில் விளயாடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்களின்பால் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் பேசினாள்.
கோபத்துடன் தேவயானி தன் தந்தையிடம் தான் கண்டறிந்ததைக் கூறினாள்.
அச்சிறுவர்கள் தன் மருமகன் யயாதிக்கும் தேவயானியின் தோழி சர்மிஷ்டைக்கும் பிறந்தவர்கள் என்று தெரிந்துகொண்ட சுக்ராச்சாரியார் கடும் கோபத்துடன் உடனே மூப்படையுமாறு சாபமளித்தர்.
ஆசையின் காரணத்தால் செய்த தவறிற்கு மன்னிப்பு கேட்ட யயாதி, சுக்ராச்சாரியாரிடம் தன்னை சாபத்திலிருந்து விடுவிக்கக் வேண்டி மன்றாடினான்.
மனமிரங்கிய அசுரகுரு யாரேனும் தன் இளமையைக்கொடுத்து மூப்பை ஏற்றுக்கொண்டால் யயாதி மீண்டும் இளமைப்பருவத்தை அடையலாம் என்றார்.
யயாதி தன் 5 மகன்களிடம் தன் முதுமையை ஏற்றுக்கொண்டு அவர்களின் இளமையை தனக்குக்கொடுக்குமாறு கேட்டான். முதல் 4 மகன்கள் மறுக்க இளய மகன் புரு தன் இளமையை தந்தைக்குக்கொடுத்தான்.
மகனிடம் இளமையை பெற்றுக்கொண்ட யயாதி 1000 ஆண்டுகள் சுகத்தை அனுபவித்ததோடல்லாமல் மக்களுக்கு நல்லாட்சி வழங்கினான்.
இன்றைய வாழ்க்கையை அளவு கோலாக வைத்துக்கொண்டால் யயாதியின் ஆசை அலை ஓயவில்லை என்று கொள்ளலாம்.
1000 ஆண்டுகளுக்குப்பின் புருவிற்கு இளமையைத் திருப்பிக் கொடுத்து அரசனாகவும் பிரகடனம் செய்தான் நகுஷன் மகனான யயாதி.
பின்குறிப்பு: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற அறிவுரை திருதராஷ்டினக்கு வழங்கப்பட்டது. இதைப்பற்றி விரிவாக வேறொரு தருணத்தில் பார்க்கலாம்.
Good one Krishnan! The historical anecdotes are apt and interesting..
Thanks