பரமனைப் பற்றியொரு பாட்டு

பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும் மனதுக்கு அமைதியைத் தந்த போது, ஒரு சில சமயங்களில் நாமே ஏதாவது தமிழில் கவிதை (போல!) எழுதினால் என்ன என்ற (கூடாத) ஆசையும் உண்டாகத் தொடங்கியது. தேடலில் சில தமிழ்ப் பதிவுகளை இட்ட உடன் இந்த ஆசை அசட்டு தைரியமாக உருவெடுத்து இன்று உயிர்ப்புடன் வெளியே வந்தே விட்டது ! அடியேனின் இந்த விபரீத முயற்சியை மன்னித்து இந்தப் பாட்டைப் பற்றிய உங்கள் உண்மையான கருத்துக்களை கீழே இடுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்!

ஓரானையின் துயர் தீர்த்து வேரானையை வேரறுத்த வேங்கடவா
பாம்பணையில் பள்ளி கொண்டு பாம்பதன் அகந்தை அழித்த பத்மநாபா
சக்கரத்தில் கீதையோதி சக்கரத்தை காலால் வென்ற சாரங்கா
புள்ளிற்கு அந்திமத்தை ஈந்து மறு புள்ளிற்கு அந்தமான புண்டரீகா
அரக்கன் தம்பிக்கு அரசருளி அரக்க அரசனுக்கு அழிவையளித்த அனந்தசயனா
வானரனை வாரி அணைத்து வாலியவன் வாழ்வை முடித்த வாசுதேவா

ஆனையிலும் அரவத்திலும் ஆழியிலும் அலகுள்ள
ஆவியிலும் அசுரனிலும் அனுமனிலும்
ஏனையோரில் வேறு வேறு தீர்வு நல்கும் நாராயணா – நீ என்
பழி பாவம் போக்கி நல்வழி நல்கும் நாளிதுவே

எந்த இலக்கணத்திலும் வகைப்படாவிட்டாலும் பெருமாளின் அன்பிற்கும் தண்டனைக்கும் பாத்திரமான ஒரே விதமான ஜீவன்களைப் பற்றி உள்ளது இந்தப் பாட்டு. எந்த உயிரினமாக இருந்தாலும் அவன் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தால் அவனின் அருளும் கருணையும் வந்து சேரும். அதே நேரத்தில் அவனைப் பற்றி ஞானமும் அறிவும் இல்லாமல் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள் அவன் கோபத்திற்கு உள்ளாகி கண நேரத்தில் அவர்கள் அழிவை அடைவார்கள்.

நாராயணன் பாதம் சரணடைவோமாக !

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

22 thoughts on “பரமனைப் பற்றியொரு பாட்டு”

    1. Thanks Anand. My Tamil knowledge is limited, so thought everyone can easily understand. Will try to give the meaning as well. Thanks for the suggestions.

  1. பாராட்டுக்கள்
    முதல்வனைப் பற்றிய முதல் முயற்சிக்கு

    வாழ்த்துக்கள்.
    மேன்மேலும் சிறப்பாய் தொடர

  2. மிகவும் அருமை….
    ஆழப் பொருள் பொதிந்த அமுதூட்டும் வரிகள்…
    கம்பரின் “அஞ்சிேல ஒன்று…. ” என்ற அனுமன் வாழ்த்தை போன்றே
    பொருள் மூடிய வரிகள்…
    பொருட்சுவை ஏறிய கவிகள் …
    அருமை ! ! !

    1. நன்றி மனோஜ். தங்களின் வாழ்த்து ஊக்கத்தைத் தருகிறது.

  3. முயற்சி திருவினையாக்கும். கவிதையும் நாம் பழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *