ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

நம் தமிழ் பண்பாட்டில் விநாயகர் வழிபாடு இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. விநாயகரை வழிபட பல எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய நூல்களைக் கற்பதாகும். விநாயகரைப் பற்றிய நூல்களில் ஔவையார் அருளிய  விநாயகர் அகவல் மிகவும் சிறந்ததாகும். விநாயகரை மனதில் தியானித்துக்கொண்டு விநாயகர் அகவலை தினந்தோறும் ஓதி வருபவருக்கு விநாயகர் தடைகளை அகற்றி வாழ்க்கையைச்  சிறப்புடையதாக அமைய ஆசி வழங்குவார்.

Avvaiyar Vinayagar

இதை மஹா பெரியவா இப்படி விளக்கியிருக்கிறார் – “யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், ஞான சாஸ்திரம் எல்லாத்தையும் சேர்த்து வைச்சு ஔவையார் விநாயகர் அகவல் பாடியிருக்கா. எல்லா ஊர்லயும் விசேஷமா பெண்களும், குழந்தைகளும், பெரியோர்களும் எல்லாரும் விநாயகர் அகவலை மனப்பாடம் பண்ணி வாரத்துக்கு ஒரு முறை முக்கியமா வெள்ளிக்கிழமை தோறும் சொல்வது நல்ல பலனை கொடுக்கும்” 

Maha Periyava “Deiva Vaakku” Vinayagar Agavalhttps://www.youtube.com/watch?v=VsED0UaCwP4






விநாயகர் அகவலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளோம். பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம்.  வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் அகவலைச் சொல்லி இக்கட்டான நிலை நீங்கி அவரின் பூரண ஆசி பெறுவோமாக.

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

 

விநாயகர் பற்றிய மேலும் ஒரு கட்டுரை

விநாயகரின் பெருமைகளையும் புராண கதைகளையும் மேற்கோள் காட்டுகிற எளிமையான “விநாயகனே வினை தீர்ப்பவனே…” பாடலை கேட்டும் குழந்தைகளை பாடவைத்தும் மகிழுங்கள்.

விநாயகனே வினை தீர்ப்பவனே..

Ganesha Slokas for Kids

Vinayakar Chaturthi is a joyous occasion for kids where they celebrate the birthday of their very first superhero with Modak (‘Kozukkattai’ in Tamil).

Let us all make our kids chant these simple slokas in Sanskrit, Tamil and English on this auspicious day.

Jai Ganesha! Slokas for kids






Author Details

My  quest to learn more about our culture and history is never-ending. Being  a student of  Sri Ramakrishna mission, Sri Ahobila Math school and Vivekananda College, what else can you expect other than the influence of our rich Indian culture and tradition? Through this website my humble attempt is to inculcate the highest knowledge of our culture to young minds in simple words.

2 thoughts on “ஔவையார் அருளிய விநாயகர் அகவல்”

  1. Very happy and complacent on seeing the explanation of varnasiraman. Thank you very much.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *