தமிழ் பக்தி இலக்கியம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் தமிழ் இலக்கிய நூல்களை படித்து அறியும் திறனை இழந்து விட்டோம். நாம் அதனை மெதுவாக மீட்டெடுத்தல் அவசியமாகும். அதற்கு முதலில் நம் பிள்ளைகளுக்கு தமிழை முறையாகக் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு எளிமையான தமிழ் பக்தி பாடல்களைச் சொல்லிக் கொடுக்கலாம். அப்படிச் செய்தால் அவர்கள் திறமை மெல்ல வளர்ந்து இலக்கிய நூல்களைப் படிக்கும் ஆற்றலை அவர்கள் ஒருநாள் பெறுவார்கள்.
அதற்கு முதல் படியாக “காலத்தால் அழியாத பக்தி பாடல்கள்” என்ற தலைப்பில் பிரபலமான தமிழ்ப் பாடல்களை பற்றிய ஒரு தொடர் கட்டுரையைத் தொடங்குகிறோம். இதன் மூலம் குழந்தைகளின் தமிழ் ஆற்றலை அதிகரிக்கச் செய்து அவர்களை கடவுள் வழிபாட்டிலும் ஈடுபட வைப்பதே எங்கள் நோக்கமாகும்.
இந்த வரிசையில் முதலாவதாக விநாயகரை போற்றும் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்ற பாடலைப் பற்றி பார்ப்போம்.
அறிய மிகவும் எளிமையான இந்தப் பாடல் விநாயகரின் பெருமைகளையும் புராண கதைகளையும் மேற்கோள்களாகக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களில் எந்த திருவிழாவாக இருந்தாலும் இந்த பாடலையே முதலில் ஒலிபரப்புவார்கள்.
இந்தப் பாடலை எழுதியவர் கலைமாமணி திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆவார். இவர், ‘நீ அல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா’, ‘சின்னஞ்சிறு பெண்போலே’, ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…’ போன்ற 4000க்கும் மேற்பட்ட தமிழ் பக்தி பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு 1975ஆம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு. டி.பி.ராமச்சந்திரன்.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம்.
எளிமையான வார்த்தைகள் கொண்ட இந்த பாடலை உங்கள் குழந்தைகளை பாட வையுங்கள். இப்படியும் குழந்தைகளின் தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தலாமே!
விநாயகனே வினை தீர்ப்பவனே பாடலின் வரிகள்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தனிவிப்பான்
விநாயகனே விண்ணிர்க்கும் மண்ணிர்க்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணீர் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
சக எழுத்தாளர் ரங்கராஜனின் பரிந்துரைகளுடன் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
நீயல்லால் தெய்வமில்லை
சின்னஞ்சிறு பெண் போலே
Nice to read this article first thing in the morning. Including the audio is a great thought…thank you for the service to mankind
Thank you Bharani