நீயல்லால் தெய்வமில்லை

நீயல்லால் தெய்வம் இல்லை... thedal

‘நீயல்லால் தெய்வமில்லை’ என்ற பிரபலமான முருகன் பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் தெய்வீகமான குரலில் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள் . பலகோடி மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த முருகன் பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் மனதிற்கு அமைதியை தரும்.

இந்த பாடலில் வரும் “மாயோன் மருகா” என்ற தொடரின் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். மாயோன் என்ற சொல் தமிழ் இலக்கியங்களிலே மிகப் பழமையான தொல்காப்பியத்தின் காப்புச்செய்யுள் பாடலில் “மாயோன் மேய காடுறை உலகமும்…”  என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாயோன் என்ற சொல் மஹாவிஷ்ணுவை குறிக்கும். தெய்வானை மற்றும் வள்ளி இருவரும் தங்கள் முந்தைய பிறப்பில் மஹாவிஷ்ணுவின் மகள்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அன்னை பார்வதி மஹாவிஷ்ணுவின் சகோதரி என்ற உறவுமுறையால் முருகர் மஹாவிஷ்ணுவிற்கு மருமகனாக கருதப்படுகிறார். எனவே தான் முருகனை அழகாக மாயோன் மருகா என்று அழைக்கிறார் இந்த பாடலை எழுதிய உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள்.

இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளவர் டி.பி.ராமச்சந்திரன். இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். மேலும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். படித்தும் கேட்டும் மகிழுங்கள்! கண்டிப்பாக உங்கள் குழந்தைகளைக் கேட்கச் சொல்லுங்கள்!

முருகனை மனமார நினைந்து வணங்கிடலே நம் வாழ்நாள் இன்பம்.

காலத்தால் அழியாத பக்தி பாடல்கள்

நீயல்லால் தெய்வமில்லை பாடலின் வரிகள்

நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா

தாயாகி அன்பு பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்

குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்

திருமேனி என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா

வாயார பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாள் இன்பம்

தூயா முருகா மாயோன் மருகா
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்

நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா

***

மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்

விநாயகனே வினை தீர்ப்பவனே..

சின்னஞ்சிறு பெண் போலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *