முன்னுரை
சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய நன்மை உள்ளது. சமஸ்க்ரிதம் மற்றும் தமிழில் அமைந்துள்ள இலக்கியங்கள் அனைத்தையும் அவர்களால் படிக்க முடிகிறது. நமது வேதங்கள், சாஸ்திரங்கள், இதிஹாசங்கள், புராணங்கள் முதலியன சமஸ்க்ரிதத்தில் அமைந்துள்ளன. அதைப் போலவே அவற்றுக்கு ஈடாக ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பர், ஒளவையார், திருவள்ளுவர், வில்லிபுத்தூரார், இளங்கோவடிகள் போன்ற எண்ணிலடங்கா தமிழ் புலவர்கள் மற்றும் கவிஞர்கள் நம் தர்மத்தை வளர்த்து வந்திருக்கிறார்கள். வழிபடும் கடவுள்களும் மரபுகளும் வேறு வேறாக இருந்தாலும், பரம்பொருள் ஒன்றே என்பதை அனைவரும் ஏற்றனர்.
இதையே பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் இவ்வாறு விவரிக்கிறார்.
“வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவை தோறும்
வணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்” – திருவிருத்தம்
மனிதப் பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதற்கு எடுத்துக்காட்டான நம்மாழ்வார் இறைவனில் வேற்றுமை இல்லை என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தம் அல்லவா?
இவ்வாறு பலவகையான வழிபாடுகள் ஒற்றுமையாகத் தொடர்ந்து வரும் நிலையில் இன்று சில கருத்து வேறுபாடுகள் தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. ஹிந்துக் கடவுள்களில் உள்ளூர் மற்றும் வெளியில் இருந்து வந்த கடவுள்கள் என்று வேறுபடுத்தும் முயற்சிகளை நாம் இப்போது காண்கிறோம். இவ்வாறான சர்ச்சைகள் மூலமாகவே நாம் உண்மையை உணருவோம் என்பதால் நாம் இதை வரவேற்போம். யார் யாரின் வாயிலோ பலபொருள்களைக் கேட்டாகி விட்டது, இப்போது மெய்ப்பொருளை காணஅறிவைப் பயன் படுத்துவோம்!
தமிழ் இலக்கியங்களின் பிறப்பு
ஆய்வாளர்களின் கணிப்பின் படி, தமிழ் மொழியின் தோற்றம் கிட்டத்தட்ட கி மு மூன்றாம் நூற்றாண்டிலேயே (300 BCE ) ஏற்பட்டு விட்டது. தமிழ் இலக்கண அடிப்படை நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப் படுகிறது. இதைத் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்கள் வெளியாயின. சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் (மன்னர்கள், பெண்கள் உட்பட) எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இவை அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமையை (காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம்) படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. அநேகமாக அனைத்து நூல்களிலும் பல தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் உள்ளன. நாம் இவற்றை உற்று நோக்கினால் எந்தெந்த கடவுள்களை அவர்கள் வணங்கினார்கள் என்பது தெளிவாகும்.
இலக்கியங்களில் இறை பாடல்கள்
தொல்காப்பியம்
தமிழகத்தின் மிகப் பழமையான இந்த நூலில் ஆசிரியரான தொல்காப்பியர் காப்புச்செய்யுளாக பாடிய பாடல் கீழே:
மாயோன் – திருமால்; சேயோன் – முருகர் ; வேந்தன் – இந்திரன் ; வருணன் – வருண பகவான்
தவிர பனைமரக் கோடி உடைய பலராமனைப் பற்றியும் தொல்காப்பியத்தில் குறிப்புகளைக் காணலாம்.
நற்றிணை
இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். 401 பாடல்களைக் கொண்ட இது 2000 வருடங்களுக்கு முன்னர் பல புலவர்களால் எழுதப்பட்டது. இவர்களில் ஒருவரான பாரதம் பாடிய பெருந்தேவனார் எழுதிய வாழ்த்துப்பா கீழே:
இந்தப் பாடலில் ஆசிரியர், எவ்வாறு திருமாலின் (விஷ்ணு) உருவம் கடல், ஆகாயம், திசைகள், சூரிய-சந்திரர்கள் , பஞ்ச பூதங்கள் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கி இருக்கிறது என்பதை விளக்கி, சங்கு சக்கரம் ஏந்திய அவரை வணங்குமாறு வேண்டுகிறார்.
பரிபாடல்
இதுவும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், முருகனுக்கு 31 பாடல், பெண் தெய்வமான கொற்றவைக்கு 1 பாடல், வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. இவற்றில் சில மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றிருக்கிறது.
முருகனை துதிக்கும் ஒரு பாடல் கீழே:
மேல் சொன்ன பாடலில் சுருதி என்பது வேதத்தைக் குறிக்கிறது. பண்டை காலத்தில் தமிழும் வடமொழியும் பின்னிப் பிணைந்து இருந்ததையே இது காட்டுகிறது அல்லவா?
புறநானூறு
இது நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த எட்டுத்தொகை நூலாகும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சிவபெருமானைக் குறிப்பிடும் ஒரு பாடல் கீழே:
ஆசிரியர் பெருந்தேவனார், சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிடுகிறார். அவனுக்கு மாலையும் கொன்றை ஊர்தியும் கொடியும் ஆனேறு என்று குறித்து, அவனுடைய பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் அனைவராலும் புகழப்படும். அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்று கூறுகிறார்.
சிலப்பதிகாரம்
இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள். இது சமணக் கோட்பாடுகளை உள்ளடக்கிய நூல் என்றாலும் நம் கடவுள்கள் பற்றிய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று கீழே:
மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர். ஐயை, கார்த்திகை என்ற பெயர்கள் கொற்றவையைக் குறிப்பனவாகும்.
இதே போல திருமாலிருஞ்சோலை மலையைப் பற்றிய குறிப்புகளையும் இதில் காணலாம்:
கோவலன் மதுரைக்கு செல்ல முயலும் போது அவனுக்கு திருமாலிருஞ்சோலை மலை (அழகர் கோயில்) வழியாகச் செல்லுமாறு சொல்லப்பட்டது. இடது பக்கம் திரும்பி ஓர் சிறு மலையைக் கடந்து ஆறு மற்றும் தோட்டங்கள் கடந்தால் அழகர் மலையை அடையலாம். அங்கு திருமாலை நிற்கும் கோலத்தில் நன்கு வழிபட்டு கருடனை கொடியில் கண்டு பிறகு தாமரை போன்ற அவரின் பாதங்களை சரண் அடைந்தால் அனைத்து பாவங்களில் இருந்து விடுபடலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள்கள் வெறும் உதாரணங்கள் மட்டுமே. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் நம் கடவுள்களை பற்றி நம் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் உள்ளூர் கடவுள்கள், வெளியில் இருந்து வந்த கடவுள்கள் என்ற நிலைப்பாடு முற்றிலும் தவறானவை என்பதை அறியலாம்.
முடிவுரை
சனாதன தர்மம் என்பது எந்த நல்ல சிந்தனை மற்றும் பழக்கவழக்கத்தையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் தன்மை உடையது. எனவே தான் அய்யனாரையும், கருப்பண்ணசாமியையும், சாய் பாபாவையும், கபீர்தாசரையும் இது போன்ற பலரை வழிபடும் அன்பர்கள் நமது ஹிந்து மதம் மேலும் தழைக்க உதவி இருக்கிறார்கள். சனாதன தர்மமானது வழிபடும் தெய்வத்தை வைத்து எப்போதுமே ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதில்லை. இதை நாம் தெளிவாக உணர்ந்தோமானால் வெளியில் இருந்து வரும் எந்த பிரிவினை சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் ஒன்றுபட்டு நம் தர்மத்தைக் காப்பாற்றுவோமாக!
காலம் தொட்டு இறை நம்பிக்கையும், வழிபாடும் உள்ளது எனபதினை இதைவிட அழகாக மேற்கோள் காட்டிச் சொல்ல முடியாது. சிறப்பு.
மிக்க நன்றி செந்தில் அவர்களே! தங்களது ஊக்கம் எங்களுக்கு எப்போதும் தேவை 🙏
Very Nice Article.
Thanks very much Anand.
சங்க கால நூல்கள ஆழ்ந்து நோக்கிய அறிவுத்திறன் போற்றற்குரியது. தெய்வத்தை வைத்து வேறுபாடு பார்க்க க்கூடாது.நல்ல அறிவுரை. இக்கால மக்கள் இதனை உணர வேண்டும்.
மிக்க நன்றி மேடம் . தங்கள் கருத்து மிகப் பயனுள்ளதாக உள்ளது.