
கேள்வி: ஹிந்துக்களின் புனித நூல் எது?
பதில்: இந்தக் கேள்விக்கு என் அறிவிற்கு எட்டிய வரை பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நாம் காணும் பல ஏகத்துவ மதங்களில் (ஒரு கடவுளை உடைய மதங்கள்) ஒரு கடவுள்-ஒரு புனித நூல் என்பதைக் காண்கிறோம். இதையே நம் ஹிந்து மதத்திலும் பொருத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். நமது மதத்தை ஏகத்துவ மதங்களோடு ஒப்பிட முடியாது. நமது மதத்திற்கு அசல் பெயரான சனாதன தர்மம் என்பதற்கு ‘புராதனமான வாழ்கை முறை’ என்று பொருள். இந்த வாழ்வு முறையில் ஏகத்துவம் (சைவம், வைணவம்,சாக்தம் முதலியன), பல கடவுள் வழிபாடு, இயற்கை வழிபாடு (பஞ்ச பூதங்கள், விருட்சங்கள் முதலியன), விலங்கு வழிபாடு (பசு, சர்ப்பம் முதலியன), ஒளி வழிபாடு (இராமலிங்க அடிகளார்), இன்னும் சொல்லப் போனால் நாத்திகம் கூட (சார்வாகம்) இதில் அடங்கும். எனவே அவரவர் நம்பிக்கைக்கேற்ப அவர்களுடைய நூலைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
பொதுவாக சனாதன தர்மத்தில் வேதமே முடிவான ஆதாரமாகக் கருதப் படுகிறது. வேதமும் அதன் கிளைகளான உபநிஷத்துக்கள், சூத்திரங்கள் (பிரம்மசூத்ரம்), ஸ்ம்ரிதிகள் (மனுஸ்ம்ரிதி முதலான), இதிகாசங்கள், புராணங்கள், வேதாங்கங்கள் ( சிக்ஷை, நிருக்தம், கல்பம் முதலான), பகவத் கீதை, தவிர நாலாயிர திவ்யப்ரபந்தம், சைவ ஆகமங்கள், ஜெயதேவரின் கீதா கோவிந்தம், துளசிதாஸரின் ராமசரிதமானஸம், திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம் போன்ற எந்த நூலும் தலையாய நூலாக இருக்கலாம்.
ஆக, அனைத்து ஹிந்துக்களுக்கும் சேர்த்து குறிப்பிட்ட எந்த நூலும் தலையாயது என்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூல் இருக்கக் கூடும். அதே சமயம் அவர்களால் மற்ற நூல்களும் போற்றப்படும்.
முந்தைய கேள்விகள்
3. வீட்டில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம்?
2. கோயிலுக்கு செல்லும் போது பாரம்பரிய உடை தான் அணிய வேண்டுமா?
1. பொருள் தெரியாமல் ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்லலாமா?

Well explained about Sanadana dharmam. Need of the hour for the society…
Thanks very much Bharani.