To read in English click here
கேள்வி : மின்சார விளக்குகள் வந்து விட்ட பிறகும் அகல் விளக்குகள் ஏற்றுவது அவசியம் தானா?
பதில்: நல்ல கேள்வி. மின்விளக்கின் பிரகாசத்தைப் பார்க்கும் போது ஒரு சிறு அகல் விளக்கின் ஒளி மிகச் சிறியது தான். ஆனால் நாம் ஏற்றும் அகல் விளக்கு வெறும் வெளிச்சத்துக்கு மட்டும் தானா என்று யோசிக்க வேண்டும். இந்த கேள்விக்கு ஆன்மீக பதில்கள் ஏராளமாக வலைத்தளங்களில் உள்ளன. இந்த கட்டுரையின் முடிவில் தீபம் ஏற்றுவதற்கான சில ஆன்மீக விளக்க காணொளிகளை பகிர்ந்துள்ளேன்.
இவை தவிர, என் சிற்றறிவுக்கு எட்டும் சில காரணங்களை இங்கு சொல்கிறேன். முதலில் நாம் விளக்கு ஏற்றுவதால் நேரக் கட்டுப்பாடு/ஒழுக்கம் ஆகியவற்றை உணருகிறோம். பொதுவாக நாம் விளக்கை விடியற் காலை மற்றும் அந்தி வேளையில் தான் ஏற்றுவோம். அப்படியானால் நாம் விடியலில் எழ வேண்டும். அதே போல இருட்டுவதற்குள் வீடு வந்து சேர வேண்டும். இது மிக நல்ல பழக்கம் இல்லையா? அதே போல விளக்கு ஏற்றுவதற்கு முன் நாம் நம்மையும் விளக்கு இருக்கும் இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தூய்மை நம் வீட்டிற்கு வந்து சேருகிறது.விளக்குடன் சேர்த்து சில ஊதுவத்திகளை எரியூட்டும் போது வீடு முழுதும் நறுமணம் கமழ்கிறது. அது மனதுக்கு இதத்தைத் தருகிறது.
மேலும், இந்த வேலையில் நம் பிள்ளைகளை ஈடுபடுத்தலாம். அவர்களும் இந்த வேலையை ரசித்து செய்வார்கள். ஏனென்றால் விளக்கில் மிளிரும் ஜோதி அவர்களுக்கு ஓரு அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்கு தீபாவளியே ஒரு நல்ல உதாரணம். விளக்கு ஏற்றிய பிறகு அவர்களை ஒன்றிரண்டு ஸ்லோகங்கள் சொல்லி வணங்க சொல்லலாம். சுவாரஸ்யமான காரியமாக இருப்பதால் கட்டாயம் செய்வார்கள்! இதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகளை வீட்டில் ஏற்றலாம் இல்லையா?
முந்தைய கேள்விகள்
2. கோயிலுக்கு செல்லும் போது பாரம்பரிய உடை தான் அணிய வேண்டுமா?
1. பொருள் தெரியாமல் ஸ்லோகங்கள்/மந்திரங்கள் சொல்லலாமா?