இன்று நரசிம்ஹ ஜெயந்தி, ஸ்ரீமன் நாராயணன் ப்ரஹலாதனின் பக்திக்கு அடிபணிந்து பகவான் நரசிம்மராக பூமியில் அவதரித்த நாள்.
ஹிரண்யகசிபு தான் பெற்ற வரங்களால் தான் தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னை மட்டும் தான் வணங்க வேண்டும் என்றும் உலகத்தையே ஆட்டிப்படைத்தான். அவன் சித்ரவதையிலிருந்து மீளவே முடியாதா என்ற சந்தேகத்துடன் பலர் இருந்தனர். ஆனாலும் பகவான் காப்பாற்றுவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ப்ரஹலாதன் வணங்கியதால் பகவான் நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை கொன்றார்.
இப்போது வந்திருக்கும் கொரோனா வைரஸ் தான் இக்காலத்தின் ஹிரண்யகசிபு. இதன் பிடியில் இருந்து எப்பொழுது மீள்வோம் என்ற சந்தேகம் நம் பலர் மனதில் இருக்கிறது. பல வரங்கள் பெற்று எளிதாகக் கொல்ல முடியாத ஹிரண்யகசிபுவை பகவான் எப்படி சம்காரம் செய்து மக்களை காப்பாற்றினாரோ அதே போல் இன்றும் நம்மைக் காப்பாற்றுவார். இக்கடினமான காலத்தில் ப்ரஹலாதன் போல நம்பிக்கையோடு இருப்பதே மனதிற்கு நிம்மதி தரும்.
ஆன்மீகமும் சினிமாவும் – 4
இந்த கருத்தை ‘பக்த ப்ரஹலாதன்’ திரைப்படம் மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறது. அதன் கடைசி சில காட்சிகளை கீழே பகிர்ந்துள்ளேன். நீங்களும் கண்டு மகிழ்ந்து இறைவனிடம் சரணடையுங்கள்.
முழு திரைப்படத்தின் இணைப்பு https://www.youtube.com/watch?v=q2KWnSm33mI