கண்ணதாசன் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள், மற்றொன்று ஆன்மிகம் தொடர்பான அவருடைய பணிகள். அவர் பகவான் கிருஷ்ணன் மீது பல பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். அவருடைய தத்துவப்பாடல்கள் பகவத் கீதையின் சாரத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கும்.
கண்ணனின் தாசனாக மாறுவதற்கு முன் அவர் கடவுளையும் வடமொழியையும் கடுமையாக இழிவு படுத்தி பேசும் ஒரு நாத்திகராக இருந்தார். சமஸ்க்ரிதத்தை செத்த மொழி என்று வர்ணித்த கவிஞர் கண்ணதாசன் பிற்காலத்தில் தெளிவு பெற்ற பிறகு இவ்வாறாகப் பேசினார்…
“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழி பெயர்ப்பாளனாகலாம். தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா. வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”
ஒரு ஆத்ம நண்பரின் உதவியோடு சமஸ்க்ரித மொழியை நன்கு கற்ற அவர் அதன் பலனாக பகவத் கீதையின் விளக்கவுரையை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். ஒரு நாத்திகனாக இருந்தாலும் உண்மையை உணர்ந்து பகவானிடம் சரணடைந்தால் அவர் சான்றோர்களுக்கு இணையாகப் போற்றப்படுவார் என்பதற்கு கண்ணதாசனின் வாழ்க்கையே ஒரு நல்ல உதாரணமாகும்.
அவர் எழுதிய ஒரு சமஸ்க்ரித கவிதை “அமர ஜீவிதம் சுவாமி…” விஸ்வநாதன் அவர்களின் இன்னிசையில் வெளிவந்த “கிருஷ்ண கானம்” என்ற பிரபலமான தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பில் இந்த சமஸ்க்ரித பாடல் இடம்ப்பெற்றிருக்கிறது. ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் மற்றொரு மொழியை வலியச் சென்று கற்று அதில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது, ஆன்மீக மார்கத்தில் மொழிகளுக்கு இடையே வேறுபாடில்லை என்பதையே காட்டுகிறது அல்லவா?
அமர ஜீவிதம் சுவாமி பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். விஸ்வநாதன் அவர்கள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். பகவான் கிருஷ்ணனுக்கு பிடித்த இந்த மார்கழி மாதத்தில் இந்த பாடலை கேட்டு பகவானின் திருவடிகளில் சரணடைவோமாக.
அமர ஜீவிதம் சுவாமி பாடலின் வரிகள்
ஓம் ஓம் ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!
நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!
சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்
சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம்
ராக பந்தனம் சுவாமி ராச லீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை
Good information on importance of learning new language at any age sir
Nice song
Thank you sir
Very nice.Heard this song before but the that was by Kannadasan is a news to me. I enlightmyself by your articles in Thedal.Thank you.
Thank you