To read in English click here
கேள்வி: குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு நேர்ந்தால் உடனே முழுக்குளியல் போடுவது ஒரு சடங்காக இருக்கிறது. ஒரு வேளை நமக்கு உயிர் நீத்தவரைச் பரிச்சயம் இல்லாமல் இருந்து நாம் வேறு ஒரு இடத்தில் இருந்தாலும் இதைக் கடை பிடிக்க வேண்டுமா?
பதில்: நமது சம்பிரதாயத்தில் குடும்பத்தில் ஒருவர் இறந்த சில நாட்களை அசௌச காலம் என்கிறோம். இதற்கு அசுத்தம் அல்லது தீட்டு என்று பொருள். இந்நேரத்தில் குடும்பத்தவர் குளித்து ஒரு சில நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பர். அந்த காலங்களில் அனைத்து உறவுகளும் ஒரே ஊரிலேயே இருந்ததால் துக்கம் நிகழும் போது கூட இருந்து உதவி செய்வர். அக்காலங்களில் பல தொற்று வியாதிகள் இருந்ததால் குளித்தல் என்பது இன்றிமையாததாக இருந்தது. அதுவும் தவிர குளிப்பதின் மூலம் துக்க உணர்ச்சிகள் குறைந்து மனதில் ஆறுதல் உருவானது.
இந்த காலத்திலோ குடும்பங்கள் உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ளனர். உறவுமுறைகள் மிகவும் குறைந்து விட்டன. அப்படி இருக்க, ஏதோ ஒரு ஒன்று விட்ட பாட்டனார் உயில் பிரிந்தால் அதற்கு சடங்குகளை பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சாஸ்திரத்தில் பல பதில்கள் இருந்தாலும் (அவற்றை உங்கள் குருவிடம் கேட்டுத் தெளிவு பெறுக), பொதுவாக எனக்கு இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன. ஒன்று, நம்முடைய பல சடங்குகள் இன்று விஞ்ஞானத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. அது போல இதற்கும் விஞ்ஞான ரீதியான காரணங்கள் நாளை கண்டு பிடிக்கப்படலாம். தவிர இன்னொரு முக்கியமான காரணம், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இவைகளை சரிவர செய்ய வில்லை என்றால் அவர்களுக்கு இந்த சம்பிரதாய விஷயங்கள் தெரியாமலே போய் விடும். நாளை அவர்கள் சில சடங்குகளை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கு உணர்த்த ஆளில்லாமல் போய் விடும்.
ஆகவே, எளிதாக இருக்கக் கூடியதும் தவறு என்று தோன்றாமல் இருக்கக் கூடியதுமான ( தவறா என்று குருவிடம் தெளிவு பெறலாம்) சடங்குகளைச் செய்வதே சரியாகும் என்பது என் தாழ்மையான கருத்து.
முந்தைய கேள்விகள்
4. ஹிந்துக்களின் புனித நூல் எது?
3. வீட்டில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம்?
2. கோயிலுக்கு செல்லும் போது பாரம்பரிய உடை தான் அணிய வேண்டுமா?