நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை கவியரசு கண்ணதாசன் “கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்…” என்ற பிரபலமான பாடல் வரிகளின் மூலம் நமக்கு புரிய வைத்திருக்கிறார்.
துன்பங்களில் இருந்து விடுபட தினந்தோறும் பகவானிடம் பக்தி செலுத்துங்கள் என்றும், அவனிடம் சரணாகதி அடைந்தால் வேத தத்துவங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியும் என்பதைக் கீழ்கண்ட வரிகளின் மூலம் கவியரசர் சுட்டிக்காட்டுகிறார்.
படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
இந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளோம். மேலும் திருமதி ஜானகி அவர்கள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பவர் M. S. விஸ்வநாதன் அவர்கள்.
இதுபோன்ற பாடல்களை நம் வீட்டு குழந்தைகள் கேட்பதின் மூலம் அவர்கள் அறியாமலே பகவான் நாமத்தை உச்சரிக்க உந்துதலாக இருக்கும்.
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்…
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி!
அந்த மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி!
அவன் கனி இதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி நிக்குது இராமாரி!
சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி!
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
இராமாரி ஹரே கிருஷ்ணாரி – ஹரி ஹரி
இராமாரி ஹரே கிருஷ்ணாரி
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை