இன்று இருக்கும் வேகமான உலகத்தில் சற்று நேரம் அமர்ந்து இறைவனை தியானிப்பது சற்று கடினமாக இருக்கிறது என்பது உண்மை. அதனால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனின் நாமங்களையாவது உச்சரிக்கலாம். அவ்வாறு உச்சரிக்கும் போது இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை பக்த பிரஹலாதன் மற்றும் ஆண்டாளின் கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
பிற கலாச்சார தாக்கத்தால் நம் குழந்தைகள் பயன்படுத்தும் “Oh No” “Oh My God” “அய்யயோ” போன்ற வார்த்தைகளுக்கு பதில் “நாராயணா” “சிவசிவ” “பிள்ளையாரப்பா” “முருகா” போன்ற பகவான் நாமங்களை சொல்லிக் கொடுத்து நம் குழந்தைகளை ஒரு ப்ரஹலாதனாகவும் ஆண்டாளாகவும் மாற்றுவதற்கு முயற்சிக்கலாமே!
இறைவனின் நாமங்களில் நாராயண நாமமாகிய அஷ்டாக்ஷரத்தை பக்தியுடன் சொல்வதன் மூலம் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு பகவானை எளிதாகச் சென்றடையலாம் என்ற ரகசியத்தை உலகிற்குச் சொன்னவர் ஸ்ரீ ராமானுஜர். இது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த அஷ்டாக்ஷர மந்திரத்தின் மகிமையை ஒரு அழகான பாடலின் மூலம் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இடம்பெற்றுள்ள படம் ‘பக்த ப்ரஹலாதன்’. பாடலை எழுதியவர் கு.ம.பாலசுப்ரமணியம். இசையமைத்தவர் எஸ்.ராஜேஸ்வரராவ்.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். பி சுசீலா அவர்கள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். இந்த பாடல் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் கண்டிப்பாக பக்தியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.
ஓம் நமோ நாராயணாய
நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயன் இல்லை
உயிர்களை வதைத்து ஹோமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவை இல்லை
மாதவா மதுசூதனா என்ற
மனதில் துயரம் இல்லை
நாராயண மந்திரம் அதுவே
நாளும் பேரின்பம்
ஆதியும் அந்தமும் நாராயணனே
அன்னையும் தந்தையும் நாராயணனே
பக்தியும் முக்தியும் நாராயணனே
பகலும் இரவும் நாராயணனே
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை
Very nice.
Thanks madam..