கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக பிடிக்கும்.
இந்த பாடலுக்கு இசையமைத்து பாடியவர் M.S. விஸ்வநாதன். அவருடைய அனைத்து கச்சேரிகளிலும் இந்த பாடலை படாமல் இருக்கமாட்டார். திருவிழாக்களில் இந்த பாடலை ஒலிபரப்பாத கோவில்களே கிடையாது
பகவானை நம் சாதாரண கண்களால் பார்க்கமுடியாது என்பதாலோ கவியரசர் மேகங்களையும், மலர்களையும், தென்றலையும் கண்ணனின் புகழை பாட கூப்பிடுவது போல் வரிகள் அமைத்துள்ளார். மஹாபாரதத்தில் கண்ணன் செய்த சாகசங்களை சில வரிககுக்குளே கொண்டுவந்த கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். M.S. விஸ்வநாதன் அவர்கள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன், ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன், அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன், அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான், அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான், நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை