கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்தேன். கந்தனின் அழகு, அறுபடை கோவில்கள் பற்றிய விளக்கம், சூரபத்மனை வென்ற நிகழ்வு போன்ற பல அழகான தருணங்களை வர்ணனையாளர்கள் சிறப்பாக விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.
இக்காட்சிகளைக் காணும் பொழுது கண்ணதாசனின் ‘திருச்செந்தூரின் கடலோரத்தில்…’ என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இதுவே இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமான வர்ணனையாக எனக்குத் தோன்றியது.
“கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?…”
என்பன போன்ற வரிகளிலே அனைத்து விஷயங்களையும் எளிமையான சொற்களை கொண்டு வர்ணிப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் அவரே.
தெய்வம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலைப் பாடிய T.M.சௌந்தர்ராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரையும் வைத்தே இப்பாடல் படமாக்கப்பட்டது மிக சிறப்பு.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். மேலும் காணொளியையும் இணைத்துள்ளோம். கேளுங்கள். உள்ளம் உருகுங்கள். கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா…
திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடலின் வரிகள்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
ஓம் நமோ நாராயணாய
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை