பொதுவாக பக்திப் பாடல்களின் இசை மென்மையாகவும், நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்ல ஏதுவாகவும் அமைந்திருக்கும். ஒரு சில பாடல்களோ கடவுள் பக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம் சோர்வடையும் தருணங்களில் நமக்கு புத்துணர்ச்சியை கொடுத்து, நம் முயற்சியை புதிய உத்வேகத்துடன் தொடரவும் உதவும்.
அப்படி நம்மை பக்தி கொண்டாட்டத்தில் கொண்டு சென்று புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு பாடலே “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…” இந்த பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் தெய்வம். கண்ணதாசன் – குன்னக்குடி வைத்தியநாதன் கூட்டணியில் அமைந்த இந்த பிரபலமான பாடலை பாடியவர் பெங்களூர் ரமணி அம்மாள்.
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா
இந்த பாடலுக்கு ஆடாத குழந்தைகளே கிடையாது. இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். காணொளியையும் இணைத்துள்ளோம். படியுங்கள், கேளுங்கள், குமரனைக் கொண்டாடுங்கள்!
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலின் வரிகள்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
ஓம் நமோ நாராயணாய
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை