சமீப காலமாக, பல சாதனைகள் செய்து வெற்றி அடைந்த நபர்கள் தவறான பழக்க வழக்கங்களால் வாழ்க்கையில் சீர்குலைந்து போவதை நாம் பார்க்கிறோம்.. ஒரு துளி விஷம் எப்படி ஒரு பாத்திரத்தில் உள்ள பால் முழுவதையும் விஷமாக்கிவிடுமோ அதை போல் பல காலங்களாக நாம் செய்து வந்த நல்ல காரியங்கள், அடைந்த வெற்றிகள் அனைத்தும் ஒரு நொடியில் நம் கெட்ட எண்ணம் அல்லது கெட்ட பழக்கங்களால் காணாமல் போய்விடக்கூடும்.
ஒருவனின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்வதில் தனி மனித ஒழுக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இராவணனின் சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது. பிறர் பொருளின் மீது ஆசை படுவது, தன் தவறுகளை பிறர் சொல்லியும் திருத்திக் கொள்ளாதது, தன்னைவிட கீழ் நிலையில் உள்ளவர்களை மதிக்காதது, பிறர் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொள்வது மற்றும் தன்னுடைய சக்தியைப் பற்றிய அகங்காரம் ஆகியவையே ஒழுக்கமின்மை ஆகும்.
ஆன்மீகமும் சினிமாவும் – 2
இந்த குணங்களை கொண்ட மனிதர்களுக்கு கடவுளின் தீர்வு என்ன என்பதை 1958ல் வெளியான சம்பூர்ண ராமாயணம் அழகாக விளக்குகிறது.
அப்படத்தில் ஒரு காட்சி: யுத்தத்தில் ராவணனைக் கொல்லாமல் ராமர் அவனுக்கு அறிவுரை வழங்கி “இராவணா! உன்னை வெற்றியடைய செய்த ஆயுதங்கள் எல்லாம் பலனற்று கீழே விழுந்து கிடக்கிறதே.. ஏன்? தன் நிலை உயர்ந்தாலும் ஒருவன் ஒழுக்கம் தவறினால் அவனின் எல்லா சக்திகளும் மறைந்துதான் தீரும். உன்னை நான் இப்போது போக விடுகிறேன். சீதையை என்னிடம் ஒப்படைத்து விடுவதே உனக்கு நன்மையைத் தரும்.நீ தனியாக அமர்ந்து இது பற்றி யோசித்து முடிவெடு. இன்று போய் நாளை வா” என்று கூறி அனுப்புவார்.
கடவுளாகவே இருந்தாலும், மற்றவர்களைத் தானாக சிந்தித்து முடிவெடுக்க சொல்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் கையில் உள்ளது என்பதை இந்த திரைப்படத்தின் உரையாடல் நமக்குச் சொல்கிறது. “இன்று போய் நாளை வா” அதாவது இன்று நம் தவறுகளை உணர்ந்தோமானால் நாளை முதல் வாழ்க்கையில் முன்னேற வழி பிறக்கும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
மேலும் இராவணனின் மனசாட்சி பேசுவது போல் வரும் வசனங்கள் கடவுள் நம்மை உயர்த்திக்கொள்ள பல வாய்ப்புகளை அளிப்பார் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல் இருக்கும். பார்த்து ரசியுங்கள்.
முழு திரைப்படத்தின் இணைப்பு https://youtu.be/wEz07iKIs38
என்னுடைய முந்தைய பதிவுகள்
ஆன்மீகமும் சினிமாவும் – 1
அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?
கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?
ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு