இன்று நாம் கேட்கவிருக்கும் பாடல் குருவாயூரில் உள்ள குட்டி கிருஷ்ணன் சன்னதிக்கே நம்மை கொண்டு சென்றுவிடும்.
கவியரசு கண்ணதாசன் எழுதிய “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்” என்ற பாடல் ரேடியோ, டிவி போன்ற கருவிகள் அதிக பயன்பாட்டில் இல்லாத காலத்திலேயே பலமுறை நாம் கேட்டிருப்போம். M.S. விஸ்வநாதன் இசையில் பி சுசீலா அவர்களின் குரலில் இந்த பாடலை கண்ணைமூடிக்கொண்டு கேட்கும்போதெல்லாம் (எத்தனை முறை கேட்டாலும்) மனதில் வர்ணிக்க முடியாத ஒரு அமைதி நிலவும்.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். பி சுசீலா பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம்.
குருவாயூருக்கு வாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்
கண்ணனின் மேனி கடல் நீலம் அவன்
கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர் கோலம்
சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஆயர்பாடி மாளிகையில்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
ஓம் நமோ நாராயணாய
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்