தமிழ் பக்தி பாடல்கள் வரிசையில் இன்று நாம் படிக்கவும், கேட்கவும் இருக்கும் பாடல், ராமு திரைப்படத்தில் வரும் ‘கண்ணன் வந்தான்..” என்ற பாடல்.
“பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே…”
வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்கும் நிலையில் உங்கள் கவலைகளை பகவானிடம் கொடுத்துவிடுங்கள், பகவான் கண்ணன் நீங்கள் விரும்பிய வடிவத்தில் உங்கள் அனைத்து இன்னல்களையும் தீர்த்து உங்களைக் காப்பாற்றுவார் என்ற உண்மையை உணர்த்தும் கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்தவர் திரு. M.S. விஸ்வநாதன்.
சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் T.M.சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் இணைந்து பாடிய பாடல் காணொளியை இங்கே இணைத்துள்ளோம்.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஆயர்பாடி மாளிகையில்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
ஓம் நமோ நாராயணாய
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை