“காலத்தால் அழியாத பக்தி பாடல்கள்” என்ற வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “வருவாண்டி தருவாண்டி மலையாண்டி” என்ற பாடல்.
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி…
இப்பாடலில் பழனி ஆண்டவரை அழகாக வர்ணித்திருப்பார் கவிஞர் கண்ணதாசன். இது போன்ற பாடல்களை நம் குழந்தைகள் அடிக்கடி கேட்பதின் மூலம் அவர்களுக்கு கடவுள் பக்தி மட்டுமின்றி தமிழ் மொழி மீதும் ஒரு ஈடுபாடு வருவதற்கு வழிவகுக்கும்.
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு. குன்னக்குடி வைத்தியநாதன். இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். படியுங்கள், கேளுங்கள், பழனி ஆண்டவரின் அருள் பெறுங்கள்.
கந்தனுக்கு அரோஹரா ! முருகனுக்கு அரோஹரா !
குமரனுக்கு அரோஹரா ! வேலனுக்கு அரோஹரா !
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடலின் வரிகள்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
குருவாயூருக்கு வாருங்கள்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஆயர்பாடி மாளிகையில்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
ஓம் நமோ நாராயணாய
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
பொய்யின்றி மெய்யோடு
கோதையின் திருப்பாவை
கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…
சின்னஞ்சிறு பெண் போலே
விநாயகனே வினை தீர்ப்பவனே..
நீயல்லால் தெய்வமில்லை
***
கந்த ஷஷ்டி கவசத்தின் சரியான அர்த்தத்தை அனைவரும் புரிந்துக்கொள்ள எங்களின் சிறிய முயற்சி.
காக்க காக்க கனகவேல் காக்க